கல்வி சார்நிலை பணி விதிகளில் திருத்தம் உயர்நீதிமன்றம் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 21, 2019

கல்வி சார்நிலை பணி விதிகளில் திருத்தம் உயர்நீதிமன்றம் உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) 2017 ஜூல 26ல் அறிவிப்பு வெளியிட்டது.எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, தகுதியானவர்கள் பட்டியல் 2018 அக்.,12 ல் வெளியானது. இதற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சிலர், &'போதிய தகுதிகள் இருந்தும் எங்கள் பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை. விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. அறிவிப்பு மற்றும் பட்டியலை ரத்து செய்ய வேண்டும். எங்களுக்கு நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும்&' என மனு செய்தனர்.2018 டிச.,7 ல் தனி நீதிபதி, &'துவக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் வாரியாக தனித்தனியே அறிவிப்பு வெளியிட வேண்டும். அந்நடைமுறை மற்றும் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த நடைமுறைகளும் ரத்து செய்யப்படுகின்றன,&'என உத்தரவிட்டார்.இதை எதிர்த்து சிலர், &'தேர்வு செய்யப்பட்டவர்களின் விளக்கத்தை கோராமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். நிர்ணயிக்கப்பட்டதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றவர்களின் நிலையை தனி நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,&' என மேல் முறையீடு செய்தனர்.
அரசு மற்றும் தேர்வானோர் தரப்பில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கலாகின.உடற்கல்வி பட்டயம் (டி.பி.எட்.,) மற்றும் சான்றிதழ் (சி.பி.எட்.,) படிப்பு முடித்த சிலர், தங்களுக்கும் பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்க உத்தரவிட வேண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு உத்தரவு: ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டவர்களுடன், உடற்கல்வி பட்டயம் மற்றும் சான்றிதழ் படித்தவர்களையும் தகுதியானவர் களாக்கருதி கருதி டி.ஆர்.பி., பரிசீலித்து, பணி நியமனம் வழங்க வேண்டும். இந்த உத்தரவு இந்நீதிமன்றத்தில் நிவாரணம் கோரி வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டும் பொருந்தும். மற்றவர்கள் உரிமை கோர முடியாது.தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.இதுபோன்ற தேவையற்ற வழக்குகளை தவிர்க்க, எதிர்கால பணி நியமனங்களை கருத்தில் கொண்டு, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) விதிகளுக்குட்பட்டு, எந்தெந்த படிப்புகள், எதற்கு சமமானவை என்பதை தெளிவுபடுத்தும் வகையில் தமிழ்நாடு கல்வி சார்நிலை பணி விதிகளில் தமிழக அரசு அவசியம் திருத்தம் கொண்டுவர வேண்டும்.இவ்வாறு உத்தர விட்டனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews