அரசு பள்ளியா….? நடன கோஷ்டியா ? டிக்டாக் கூத்து..! Video - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 16, 2019

அரசு பள்ளியா….? நடன கோஷ்டியா ? டிக்டாக் கூத்து..! Video

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தை சுடுகாடாக சித்தரித்து மாணவர்கள் செய்துள்ள டிக்டாக் வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிக்டாக்கிற்கு அடிமைகளாக மாறி வரும் ஊதாரி மாணவ மாணவிகளின் டிக்டாக் சேட்டைகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு... தாங்கள் கட்டணமின்றி பல்வேறு சலுகைகளுடன் படிக்கின்ற அரசு பள்ளிக்கூடத்தை சுடுகாடாக சித்தரிக்கும் இந்த மாணவர்களை பாருங்கள்..! click here to watch the video தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வித்தரத்தில் முன்னேற வேண்டும் என்று பள்ளிகல்வித்துறையில் பல்வேறு சீர்த்திருத்தங்களை அமைச்சர் செங்கேட்டையன் செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் டிக்டாக் செயலிக்கு அடிமையான சில மாணவர்களால், சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்கள் கூத்தடிக்கும் மடங்களாக மாறிவருகின்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது பள்ளிகளுக்குள் ஸ்மார்ட் போன்களை எடுத்து செல்வதால் டிக்டாக் செயலிக்கு அடிமையாகி மனநிலை பிறழ்ந்தவர்கள் போல பேசி திரிகின்றனர்
பள்ளியில் கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்களை படிப்பது கிடையாது முழுக்க முழுக்க தங்களை காதல் நாயகர்களாக, நாயகிகளாக நினைத்துக் கொண்டு ஒரு கும்பல் பள்ளியில் சுற்றி திரிகின்றது பள்ளி வகுப்பறையில் பாடபுத்தகம், மேஜையை தள்ளிவிட்டு குடிகாரன் போல தரையில் உருளுகின்றான் இந்த மாணவன் மாணவர்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் மாணவிகளும் திறமையை காட்டுகின்றனர் பள்ளி வகுப்பறை கரும்பலகையில் திருக்குறளை “தல” குறளாக மாற்றி விட்டனர் இந்த சினிமா அடிமைகள்.. அரசு இலவசமாக வழங்கும் பாட புத்தகங்களை, அதி புத்திசாலிகளை போல வசனம் பேசி தூக்கி வீசுகின்றனர் இந்த அறிவிலிகள் இலவச மடிகணினி வழங்கவில்லை என்று குரல் கொடுத்து அரசியல் செய்த இந்த புத்திசாலி மாணவர் கூட்டம் மடிக்கணியை தரையில் வைத்து கூடி நின்று கும்மியடிக்கின்றது இவர்களை கண்காணிக்க வேண்டிய ஆசிரியைகளையும் இந்த கும்பல் விட்டு வைப்பதில்லை
வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருக்கும் போதே ஒரு மாணவன் செய்யும் அமர்க்களம் தான் இந்த காட்சி பள்ளியில் தான் கூத்து என்றால் பேருந்து நிறுத்தத்திலும் பள்ளி சீருடையுடன் தங்கள் திறமையை காட்டுகின்றனர் இந்த முக்கால் பேண்டு போட்ட சிறுவர்கள் இதனை பயன்படுத்திக் கொண்டு மாணவிக்கே தெரியாமல் வீடியோ எடுத்து சில ரோமியோக்கள் டிக்டாக்கில் பதிவிடும் அவலமும் தொடர்கிறது யார் என்ன சொன்னாலும் நாங்க திருந்தவே போறதில்லை என்ற மன நிலையுடன் கடற்கரையிலும் பள்ளி சீறுடையுடன் சுற்றி திறிகின்றது இந்த ஜோடி அரசு பள்ளிகளில் செல்போனுக்கு தடை என்று வழக்கம் போல செயல்படுத்த முடியாத கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு பதிலாக சமூகத்தையும், நாளைய இளம் தலைமுறையையும் பொழுது போக்கு என்ற பெயரில் சீரழிக்கும் இந்த டிக் டாக் செயலிக்கு தமிழகத்தில் நிரந்தர தடை விதித்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்..!
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews