ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் TRB தர எண் (Rank No) வரிசை படி முன்னுரிமை நிர்ணயம் செய்ய கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 12, 2019

ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் TRB தர எண் (Rank No) வரிசை படி முன்னுரிமை நிர்ணயம் செய்ய கோரிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
🌸முன்னுரிமை பட்டியல்🌸 ✍முன்னுரிமை பட்டியல் மற்றும் வருடாந்திர பேனல் தயாரிப்பு - தேர்வாணையம் அல்லது ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) போன்றவற்றால் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களின் தர எண் (Rank No) வரிசை படி முன்னுரிமை நிர்ணயம் செய்ய வேண்டும். பார்வை:-
1. தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறை 40899/ஈடி1/1995 நாள்:12/12/1995
2. தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் 5939/ஈடி1/2001 நாள்:15/11/2001
3. தமிழ்நாடு மாநில சார்நிலைப் பணி விதிகள் பகுதி 1 மற்றும் 2 இல் விதி 35a
✍ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு தொடக்கக் கல்வித் துறையில் ஏதோ ஒரு ஒன்றியத்தில் பணியில் சேர்ந்து எவ்வித ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதலும் இல்லாமல் தொடர்ந்து தாய் ஒன்றியத்திலே (Parent Union) பலர் பணிபுரிந்து வருகின்றனர்.
✍ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவில் முன்னுரிமை பட்டியல் மற்றும் வாராந்திர பேனல் தயாரிப்பது குறித்து பார்வை 1&2 ல் காணும் இயக்குநரின் ஆணைகள் விரிவான அறிவுரைகளை வழங்கியுள்ளது. ✍தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகளில் , ஊராட்சி ஒன்றிய ஆணையர்களால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் முன்னுரிமை வரிசை எண் (Roaster serial No) அல்லது தர வரிசை எண் (Rank No) என்ன என்பது அறிய இயலாத நிலையில் ஆசிரியர்கள் நியமனம் செய்து வந்துள்ளதால் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்படும் முறை நடைமுறையில் இருந்து வந்தது. தரவரிசை எண் இல்லாத நிலையில் ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் நேரடி நியமனம் மூலம் பதவி சேர்ந்தால் அவர்களது பிறந்த தேதியின் (Date of Birth) அடிப்படையில் வயதில் மூத்தோர் யாரோ அவர் பணி மூப்பில் மூத்தவராக நிர்ணயம் செய்யப்படுவார் என்று தெளிவாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ✍ஆனால், 1995 க்குப் பின்னர் ஊராட்சி ஒன்றிய ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. பார்வை-1&2 ல் கண்ட செயல்முறைகளில் பத்தி-4 தமிழ்நாடு சார்நிலை பணி பொதுவிதி (TNSSR) 35 ன் படி நேரடி நியமனம் மூலம் செய்யப்படும் அரசு பணியாளர்களின் முன்னுரிமை பணியிடத்திற்கு நபரை தேர்வு செய்யும் தேர்வாணையம் (Commission) அல்லது ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) போன்றவற்றால் ஏற்பளிக்கப்படும் நாடுநர்களின் நியமனம் செய்யப்படும் தர எண்ணின் (Rank No) வரிசை கிரமத்தின் படியே அமையும் என தெளிவாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
✍இவ்வாறு ஏற்பளிக்கப்பட்ட நாடுகளின் முன்னுரிமை வரிசை எண்ணின் படி முன்னுரிமை நிர்ணயித்தால் ஒரே நாளில் பணியில் சேர்ந்துள்ளார் என்ற பிரச்சினை எழாது. ஒரே தேதியில் எத்தனை பேர் பணியில் சேர்ந்தாலும் முன்னுரிமை என்பது நியமன அதிகாரி ஏற்பளிக்கப்பட்ட நாடுநர்களின் முன்னுரிமை தர எண் படியே அமைவதால் பிறந்த தேதியைக் கொண்டு முன்னுரிமையை நினைக்கும் நிலை இல்லை. மேலும், இந்த ஏற்பளிப்பு பட்டியலில் உள்ள முன்னுரிமை வரிசையின்படி முன்னிரிமை நிர்ணயித்து அதன் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் போது அந்தந்த பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள ஒதுக்கீடு (Rule of Reservation) பதவிஉயர்வு பணிகளிலும் காக்கப்படும் இயக்குநரின் செயல்முறை தெளிவான அறிவுரை வழங்கியுள்ளது. ✍"முன்னுரிமை என்பது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமனம் செய்யப்படும் இனங்களில் வாரியத்தால் வழங்கப்படும் தர எண் அடிப்படையில் நிர்ணயம் செய்வதாகும்". எனவே , இயக்குநரின் செயல்முறைப்படி முன்னுரிமையானது ஏற்பளிக்கப்பட்ட நாடுநர்களின் பட்டியலில் உள்ள வரிசைக் கிரமத்தின் படியே அமையும் என்பதால்... நியமனத்தின் போது நியமன ஆணையில் வழங்கும் தர எண் (Rank No) படியே முன்னுரிமைப் பட்டியல் மற்றும் பேனல் தயாரிக்கப்பட்டு பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும்.
✍ஒன்றியங்களில் (அலகில்) முன்னுரிமை பட்டியல் தயாரிப்பானது பார்வை-1&2 இயக்குநர் செயல்முறைகளின் படி TRB மூலம் ஏற்பளிக்கப்பட்ட ஆசிரியர்களை தர எண் (Rank No) அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்படவில்லை. ✍மாறாக ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் நியமனம் ஊராட்சி ஆணையர்களால் நியமிக்கும் முறையில் கடைபிடிக்கப்படும் பிறந்த தேதி (Date of Birth) அடிப்படையில் முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையால் இந்திய அரசியலமைப்பின் படி Rule of Reservation (பதவி உயர்வு வழங்கும் போது அந்தந்த பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள ஒதுக்கீடு) பின்பற்ற படாமல் இருப்பதால் பலர் பாதிப்படைகின்றனர். ✍ஒன்றியங்களில் முன்னுரிமை நிர்ணயம் செய்வது சார்ந்து தெளிவின்மையும் , TRB மூலம் ஏற்பளிக்கப்பட்ட நாடுநர்களின் முன்னுரிமையானது இயக்குநர் செயல்முறைகளின் படி நடைமுறைப்படுத்தாமலும் இருப்பதால் பார்வை-1&2 கண்ட இயக்குநரின் செயல்முறைகளின் படி ஒன்றியத்தில் TRB மூலம் பணிநியமன ஆசிரியர்களை தர எண் அடிப்படையில் முன்னுரிமை பட்டியல் தயாரித்து ஏற்பளிப்பு வழங்க வேண்டும். ✍தர வரிசை எண் படி முன்னுரிமை நிர்ணயித்து அதன் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் போது அந்தந்த பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள ஒதுக்கீடு (Rule of Reservation) பதவிஉயர்வு பணிகளிலும் காக்கப்பட வேண்டும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews