👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தன் வட்டி விகிதங்களை மீண்டும் குறைத்திருக்கிறது.
பொதுவாக வங்கிகளில் MCLR - Marginal Cost of Lending Rate என்றழைக்கப்படும் வட்டி விகித முறையைத் தான் கடை பிடிக்கிறார்கள். எஸ்பிஐயில் கடன் வாங்கி இருப்பவர்களில் பலரும் SBI Interest Rate குறைந்ததைப் பற்றி வங்கிகளிடமே விசாரித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களில் பெரும்பாலான கடன்கள் இந்த MCLR வட்டி + ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் என்று தான் இருக்கும். உதாரணத்துக்கு தற்போதைய MCLR 8.45 + 3.5 சதவிகிதம் = 11.75% வட்டிக்கு கடன் வாங்குவார்கள்.
ஆகையால் MCLR வட்டி விகிதம் குறைந்தால், MCLR அடிப்படையில் வழங்கிய அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதங்களும் அப்படியே குறையும்.
கடந்த ஜூன் 2019-ல் மத்திய ரிசர்வ் வங்கி தன் ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை மேலும் 0.25 சதவிகிதம் குறைத்தது 5.75 ஆக நிர்ணயித்துக் கொண்டது. அதற்கு இப்போது தான் எஸ்பிஐ தன் வட்டி விகிதத்தை குறைக்கிறார்கள் போல. சரி எவ்வளவு குறைத்திருக்கிறார்கள்..?
வட்டி குறைப்புக்கு முன் எஸ்பிஐ வங்கியின் MCLR வட்டி விகிதம் 8.45 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இப்போது 0.05 சதவிகிதம் குறைத்திருக்கிறது எஸ்பிஐ. ஆக இப்போது எஸ்பிஐயின் MCLR வட்டி விகிதம் 8.40 சதவிகிதமாக இருக்கிறது. இந்த வட்டிக் குறைப்பு ஜூலை 10, 2019-ல் இருந்து அமலுக்கு வருகிறது.
கடந்த ஏப்ரல் 10, 2019-ல் தான் எஸ்பிஐ வீட்டுக் கடன்களுக்கு 0.20 சதவிகித வட்டியைக் குறைத்தது. அதற்கு முன்பே ஒரு புதிய, ஆர்பிஐ ரெப்போ ரேட் வட்டி விகிதம் அடிப்படையிலான வீட்டுக் கடன் திட்டத்தைக் கொண்டு வந்தது.
சரக்கு விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ரூ.31,157.83 கோடி வருமானம்..மொத்தபணமும் இங்கதான் இருக்கும் போல?
எஸ்பிஐயின் ரெப்போ ரேட்டை அடிப்படையாகக் கொண்டு வட்டி நிர்ணயிக்கும் திட்டத்துக்கு repo rate-linked lending rate (RLLR) என்று பெயர். இந்த திட்டத்தின் படி ஆர்பிஐயின் 5.75 சதவிகித வட்டி தான் அடிப்படையாக இருக்கிறது. அதோடு சில சதவிகிதம் கூடுதல் வட்டி நிர்ணயிக்கப்பட்டு சுமார் 8.4 சதவிகிதத்துக்கு வீட்டுக் கடன் வழங்கி வருகிறது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா.
இந்த 0.05 சதவிகித வட்டி குறைப்பால், உங்களுக்கு எவ்வளவு லாபம் என கமெண்டுங்களேன்..!
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U