👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாடு முழுவதும் ஜூலை 15ம் தேதி நெட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் அந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயத்துக்கு கல்லூரி ஆசிரியர்கள் சிலர் தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர், கவுரவ விரிவுரையாளர்கள் பணி செய்வோர் யுஜிசி நிர்ணயித்துள்ள கல்வித்தகுதியான செட், நெட் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.எச்டி முடித்திருக்க வேண்டும் என்ற விதியை கண்டிப்பான முறையில் அமல்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழகங்களை அறிவுறுத்தி வருகிறது.
இதனால் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக நிர்வாகங்கள், தங்களுக்குகீழ் இணைவு பெற்ற கல்லூரிகளின் நிர்வாகங்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி வருகின்றன. இதனால் தகுதியுள்ள ஆசிரியர்களை மட்டுமே கல்லூரிகளில் பணியில் வைத்திருக்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அரசுக்கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களில் சிலர் உரிய கல்வித்தகுதி பெறவில்லை. அதே போல் தனியார் கல்லூரிகளை பொறுத்தவரை நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு உறவினர் என்ற அடிப்படையிலும், சாதி, மதம் அடிப்படையில் உரிய கல்வித்தகுதி பெறாத பலர் உதவி பேராசிரியர்களாக பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட கல்வித்தகுதி கட்டாயமாக்கப்படும்பட்சத்தில் சிலரை ஆசிரியல்லாத பணியாளர்களாக பணியில் தொடர வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் யுஜிசி சொல்லும் தகுதித்தேர்வான நெட் தேர்வு கடந்த மாதம் 20,21,24ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உதவி பேராசிரியர், மத்திய மாநில அரசு கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் இளநிலை ஆராய்ச்சியாளர்(ஜூனியர் ரிசர்ச் பெல்லோ சிப்) ஆகலாம். புதிய தேர்வர்கள், ஏற்கனவே யுஜசி சொல்லும் கல்வித்தகுதி பெறாத ஆசிரியர்கள் என நாடு முழுவதும் இருந்து 9.42 லட்சம் பேர் நெட் தேர்வை எழுதினர். பொதுப்பிரிவின்கீழ் விண்ணப்பித்தவர்கள் முதல்தாள் தேர்வு, இரண்டாம் தாள் தேர்வில் தனித்தனியே 40 சதவீத மதிப்பெண்களும், ஓபிசி(நான் கிருமி லேயர்), எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் பிரிவுகளை சேர்ந்தவர்கள் 35 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். இந்த தேர்வு முடிவுகள் ஜூலை 15ம் தேதி வெளியாக உள்ளது. இதனால் தேர்வில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டிய நிலைக்கு யுஜிசி சொல்லும் தகுதி பெறாத ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக தனியார் கல்லூரி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:ஆசிரியர்களின் கல்வித்தகுதி தொடர்பாக தற்போது விளக்கம் கேட்கும் யுஜிசி, பல்கலைக்கழக நிர்வாகங்கள் இதுவரை ஆசிரியர்கள் உரிய கல்வித்தகுதி பெற்றுள்ளார்களா, இல்லையா என்பதை கூட கண்காணிக்கவில்லை என்பது தெளிவாகிறது. சில ஆண்டுகளாக பணியில் உள்ளவர்களை தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியில் தொடர முடியும் என்று அழுத்தம் கொடுப்பதற்கு பதில், பணி நியமனத்தின்போதே கல்வித்தகுதியை ஆய்வு செய்திருந்தால் இந்த பிரச்னை எழுந்திருக்காது. இவ்வாறு தனியார் கல்லூரி ஆசிரியர் கூறினார். சில ஆண்டுகளாக பணியில் உள்ளவர்களை தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியில் தொடர முடியும் என்று அழுத்தம் கொடுப்பதற்கு பதில், பணி நியமனத்தின்போதே கல்வித்தகுதியை ஆய்வு செய்திருந்தால் இந்த பிரச்னை எழுந்திருக்காது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U