👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பாரதியார் பல்கலையின் கீழ் பதிவாளர் உள்ளிட்ட ஐந்து முக்கிய பணியிடங்களுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் காலாவதியாகியுள்ளன. விண்ணப்பித்தவர்கள் வழக்கம் போல் ஏமாந்து நிற்கின்றனர். தகுந்த 'தலை' இல்லாததால், ஊழியர்கள் அச்சமின்றி பணிகளில் அலட்சியம் காட்டுவதாக, கல்வியாளர்கள் புகார் எழுப்புகின்றனர்.
பல்கலையின் பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, மக்கள் தொடர்பு அதிகாரி, தொலைதுார கல்வி மைய இயக்குனர், கல்லுாரி மேம்பாட்டு கவுன்சில் டீன் உள்ளிட்ட ஐந்து முக்கிய பதவிகளுக்கு 2018 ஆக., 13ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, டிச., மாதம் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இன்று வரை நேர்காணல் நடத்துவதற்கான, எவ்வித செயல்பாடுகளையும் பல்கலை நிர்வாகம் மேற்கொள்ளவில்லை.
நேர்காணல் நிறுத்தப்பட்டதாகவோ, விண்ணப்பங்கள் காலாவதியாகி விட்டதாகவோ, எவ்வித அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும், பல்கலை நிர்வாகம் வெளியிடாமல் இருப்பதால், விண்ணப்பித்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.விண்ணப்பதாரர் ஒருவர் கூறுகையில், 'இதுவரை ஒரு பணியிடத்துக்கு மூன்று முறை விண்ணப்பித்துள்ளேன். காலாவதியாகி விட்டதாக அவர்களே முடிவு மேற்கொண்டு, பணிகளை நிறுத்தி விடுகின்றனர். விண்ணப்பித்தவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும், 800 ரூபாய் வரை செலவழித்தே விண்ணப்பிக்கிறோம்' என்று குமுறினார்.
இதுகுறித்து, பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், 'பணியிடங்கள் நிரப்ப பேரம் நடைபெற்றது. 'ஒரு சில சிண்டிகேட் உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்காததால், இப்பணிகள் இழுபறியாகி காலாவதியாகும் நிலை எழுந்தது' என்றார். 'அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே' என பாரதி பாடியதை, பேரம் பேசவும், ஊழல் புரியவும் அச்சப்பட வேண்டியதில்லை என, தவறாக புரிந்து கொண்டார்களோ என்னவோ!
முதலில் துணைவேந்தர்!
பல்கலை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் திருநாவுக்கரசு கூறுகையில், ''பதிவாளர் உள்ளிட்ட முக்கிய பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள், காலாவதியாகி விட்டன. மீண்டும் விண்ணப்பங்களை பெறுவதற்கு போதிய அவகாசம் இல்லை. முதலில் துணைவேந்தரை நியமிக்க, பல்கலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. துணைவேந்தர் பணிநியமனத்திற்கு பின், மீண்டும் இதுசார்ந்த செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U