தரையில் அமரும் கல்லுாரி மாணவர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 01, 2019

தரையில் அமரும் கல்லுாரி மாணவர்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சபாநாயகர் தனபாலின் தொகுதியான அவிநாசியில், 7.97 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய அரசு கலைக் கல்லுாரி கட்டியும், போதுமான இருக்கை வசதி இல்லாததால், மாணவ - மாணவியர், தரையில் அமர்ந்து கற்கும் அவலம் உள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி மற்றும் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, அரசு கலைக் கல்லுாரிக்கான புதிய கட்டடங்களை, சமீபத்தில், முதல்வர், இ.பி.எஸ்., 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் திறந்து வைத்தார்.சாய்தள வசதிஇதில், அவிநாசி கல்லுாரியில், 850க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். கல்லுாரிக்கு, 7.97 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இரண்டடுக்கு கட்டடத்தில், கழிப்பறைகள், குடிநீர் வசதி, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சாய்தள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
கல்லுாரி கட்டடத்தின் நடுவே உள்ள திறந்தவெளியை, கலையரங்கமாக பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மழைநீர் சேகரிப்புகட்டமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.கோடிக்கணக்கில் செலவழித்து, இத்தனை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டும், ஓரிரு லட்சம் ரூபாய் செலவழித்து வகுப்பறை, 'செமினார்' அறை மற்றும் கம்ப்யூட்டர் அறையில் மாணவர்களுக்கு, இருக்கை, மேஜை வசதி செய்து கொடுக்கப்படவில்லை. அதற்கான நிதி ஒதுக்கீடும் இல்லை. முடிவு இதனால், மாணவ - மாணவியரை தரையில் அமர்த்தி, பாடம் கற்பிக்கவேண்டிய அவலம்உள்ளது. இத்தனைக்கும், அவிநாசி, சபாநாயகர் தனபால் போட்டியிட்டு ஜெயித்த தொகுதி.சமூக வலைதளங்கள் வாயிலாக, தனியார்நிறுவனங்கள் உட்பட நன்கொடையாளர்களை, கல்லுாரி ஆசிரியர்கள்தேடி வருகின்றனர்.தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்க, தொகுதி, எம்.பி., - எம்.எல்.ஏ.,வை அணுகவும் முடிவு செய்துள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews