நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தனியார் கல்லூரிகள்: எதார்த்த நிலையை நீதிமன்றத்தில் விளக்குமா தமிழக அரசு? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 01, 2019

நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தனியார் கல்லூரிகள்: எதார்த்த நிலையை நீதிமன்றத்தில் விளக்குமா தமிழக அரசு?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரியர் தகுதி குறித்த, யு.ஜி.சி., உத்தரவை உரிய காலத்தில் பின்பற்ற நடவடிக்கை எடுக்காத உயர் கல்வி துறையால், தனியார் கல்லுாரிகள், தற்போது கடும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பணிநீக்கம் செய்யப்படும் ஆசிரியர்கள் இடத்தில், தகுதியுள்ள ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், அசாதாரண சூழ்நிலை நீடிக்கிறது.தமிழகத்தில், 450க்கும் மேற்பட்ட சுயநிதி கல்லுாரிகள் உள்ளன. அரசிடமிருந்து, எவ்வித நிதியுதவியும் பெறாமல், தன்னாட்சி அந்தஸ்து பெற்று செயல்படுகின்றன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பல ஆண்டுகளாக பணியில் உள்ளனர்.l ஏன் இந்த திடீர் நெருக்கடி?யு.ஜி.சி., விதிப்படி, பல்கலைகள் மற்றும் பல்கலைக்கு உட்பட்ட இணைவிப்பு கல்லுாரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்கள், செட் / நெட் அல்லது பிஎச்.டி., தகுதி பெற்றிருக்க வேண்டும்.ஆனால், 'மதுரை காமராஜ், சென்னை மற்றும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகள் மற்றும் இணைவிக்கப்பட்ட கல்லுாரிகளில், இவ்விதி பின்பற்றப்படவில்லை' என, நாகர்கோவிலில் உள்ள மூட்டா அமைப்பைச் சேர்ந்த, அனந்தகிருஷ்ணன் என்பவர், ஜன., 2014ல், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.விசாரித்த நீதிமன்றம், 'தகுதியில்லாத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட கல்லுாரிகளில், பல்கலைகள், மூன்று மாதங்களுக்குள் விசாரித்து, யு.ஜி.சி.,க்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்பின், யு.ஜி.சி., சார்பில் நடவடிக்கை எடுக்க துாங்கியதா பல்கலைகள்?
நீதிமன்றத்தின் இந்த உத்தரவுப்படி, பல்கலைகள் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அதன் அறிக்கையை, யு.ஜி.சி.,யிடம் அளித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.உதாரணமாக, மதுரை காமராஜ் பல்கலையில், கல்யாணி, அவருக்கு பின், செல்லத்துரை என, துணைவேந்தர்கள் பதவியில் இருந்த காலத்தில், இப்பிரச்னையில் எள் அளவு கூட அக்கறை காட்டவில்லை. மாறாக, விதிமீறிய நியமனங்கள் தான் தொடர்ந்தன.l தாராளமாக வழங்கப்பட்ட, 'அனுமதி'கள்அதேநேரம், இணைவிப்புக் கல்லுாரிகளில், ஏராளமான புதிய பாடங்கள் துவங்கப்பட்டன. 'இதற்கு, யு.ஜி.சி., விதித்த நெட் / செட் அல்லது பிஎச்.டி., தகுதியுள்ள ஆசிரியர்கள் இருந்தால் தான், அனுமதி அளிக்க முடியும்' என, பல்கலைகள் கண்டிப்பு காட்டவோ, நடவடிக்கை எடுக்கவோ இல்லை.அப்போதெல்லாம், தனியார் கல்லுாரிகளுக்கு ஆய்வுக்கு சென்ற பல்கலை அதிகாரிகள் குழு, இது குறித்து கல்லுாரிகளை எச்சரிக்கவில்லை. மாறாக, கல்லுாரி நிர்வாகங்கள் நீட்டிய ஆவணங்களில், 'கையெழுத்து' போட்டு, பாடங்களுக்கு அனுமதியை அள்ளி வழங்கிய அதிகாரிகளை என்ன செய்வது? அவர்கள் குறித்து விசாரிக்க உத்தரவிடப்படுமா?'துாங்கி வழிந்த பல்கலைகளால் தான், இவ்வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை' என, நீதிமன்றத்தில், அனந்தகிருஷ்ணன் மீண்டும் முறையிட்டதால், பிப்., 2017ல், இதை நீதிமன்றம் அவதுாறு வழக்காக, விசாரணைக்கு எடுத்தது.அதன்பின் தான், பல்கலைகள் சுறுசுறுப்படைந்து, சுற்றறிக்கை மேல் சுற்றறிக்கைகள் அனுப்பி, 'எங்கள் மீது தவறு ஏதும் இல்லை. கல்லுாரிகள் மீது தான் தவறு' என, ஆதாரங்களை காட்டுகின்றன. எனவே, பல்கலைகளின் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்பாடுகள் காரணமாக, இன்று தமிழக அளவில், தனியார் கல்லுாரிகள், கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன. இதற்கு அந்த காலகட்டங்களில், பல்கலைகளில் பதவியில் இருந்த துணைவேந்தர்கள், பதிவாளர்கள் தான் பொறுப்பு. அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
 குழப்பத்திற்கு யார் காரணம்? வழக்கு தொடர்ந்த, 2014ம் ஆண்டிலேயே நீதிமன்ற உத்தரவை, உயர்கல்வி துறை கடுமையாக அமல்படுத்தியிருந்தால், தனியார் கல்லுாரிகளுக்கு தற்போது இந்த குழப்பமே ஏற்பட்டிருக்காது. அதே நேரம், உரிய காலத்தில், 'நெட்' எனப்படும் தேசிய தகுதி தேர்வு நடத்தப்படுவது போல், தமிழகத்தில், 'செட்' எனப்படும் மாநில தகுதி தேர்வு நடத்தப்படுவதில்லை.ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு பல்கலை பொறுப்பேற்று, 'செட்' தேர்வை நடத்தும். ஆனால், இந்தாண்டு, இதுவரை, 'செட்' தேர்வுக்கான அறிவிப்பு கூட வெளியாகவில்லை. 'யு.ஜி.சி., உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும்' என, நீதிமன்றம் கண்டிக்கும் இந்த சூழலில், தமிழக அரசு, 'செட்' தேர்வு நடத்த, இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.வழக்கம்போல், ஜூனில் இத்தேர்வு நடத்தப்பட்டிருந்தால், பல தகுதியான ஆசிரியர்கள் கிடைத்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். யு.ஜி.சி., உத்தரவை அமல்படுத்த காரணம் காட்டி, 'செட்' தேர்வை ஏன் நடத்தவில்லை என, நீதிமன்றமாவது தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியிருக்கலாம்.
அடிப்படை எதார்த்தம் என்ன? யு.ஜி.சி., உத்தரவுப்படி, தகுதியான ஆசிரியர்களை நியமிக்க, கல்லுாரி நிர்வாகங்கள் தயாராக இருந்தாலும், தகுதியான ஆசிரியர்கள் கிடைப்பதில்லை.குறிப்பாக, தமிழ், ஆங்கிலம் தவிர அறிவியல் பாடங்களுக்கு, செட் / நெட் அல்லது பிஎச்.டி., முடித்த ஆசிரியர்கள் கிடைக்கவில்லை. பல பல்கலைகளில், தகுதியான பேராசிரியர்கள் பலர், பிஎச்.டி., கைடு அந்தஸ்துக்கு விண்ணப்பித்து, காத்துக் கிடக்கின்றனர்.தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள், பிஎச்.டி., முடிக்க முயற்சித்தாலும், அதற்கான, கைடுகள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. உதாரணமாக, ஒரு கல்லுாரியில், ஒரே நேரத்தில், 20 ஆசிரியர்கள் வரை வேலையிழக்க நேர்ந்தால், அங்கு படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் நிலை என்னவாகும். தகுதியான ஆசிரியர்கள் தட்டுப்பாடுள்ள நேரத்தில், உடனடியாக, 20 ஆசிரியர்களை கல்லுாரி நிர்வாகம் நியமிக்க முடியுமா?  என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? உடனடியாக, 'செட்' தேர்வை நடத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், தாமதம் ஏற்படும் பட்சத்தில், நீதிமன்றம் தலையிட்டு, தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும். ஜூலையில், 'செட்' நடத்தினால் கூட, 50 சதவீதம் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளது.
தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? தனியார் கல்லுாரிகளில், உடனடியாக தகுதியான ஆசிரியர்களை நியமிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து, நீதிமன்றத்தில் தெளிவாக, தமிழக அரசு விளக்கம் அளிக்க முன்வர வேண்டும். போதிய, பிஎச்.டி., கைடுகள் இல்லை. 'செட்' தேர்வு நடத்தவில்லை என்பதை தெரிவிக்க வேண்டும்.தமிழகத்தில், 'நெட்' தேர்வில், வெறும், 4 முதல் 5 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். இதனால், உடனடியாக தகுதியான ஆசிரியர்கள் கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து, நீதிமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டும்.குறைந்தபட்சம், ஐந்து ஆண்டுகள் அவகாசம் கிடைத்தால், தற்போதுள்ள ஆசிரியர்கள், யு.ஜி.சி., தகுதிகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். மாணவர்கள் நலனும் காக்கப்படும். தமிழக அரசு, இவ்விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழ்வாதாரத்தை இழந்த ஆசிரியர்கள்! - நமது நிருபர் -
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews