திராவிடப் பல்கலையில் தமிழ் படிக்க யாருக்கும் விருப்பம் இல்லை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 24, 2019

திராவிடப் பல்கலையில் தமிழ் படிக்க யாருக்கும் விருப்பம் இல்லை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
துறையின் தலைவர் முனைவர். விஷ்ணுகுமாரன் கூறுகையில், போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார் ஆந்திரப் பிரதேசத்தில் 1997ஆம் ஆண்டு திராவிடப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. சித்தூர் மாவட்டத்தின் குப்பம் பகுதியில் உள்ள இந்தப் பல்கலைக்கழகம் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய தென் மாநிலங்களின் உதவியுடன் நிறுவப்பட்டது. இதில் இயங்கிவரும் தமிழ் மொழி மற்றும் மொழிபெயர்ப்பு துறையில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் யாரும் சேரவில்லை எனத் தெரியவந்துள்ளது. இது பற்றி துறையின் தலைவர் முனைவர். விஷ்ணுகுமாரன் கூறுகையில், போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார். இரண்டு காரணங்களால் இந்த ஆண்டு வந்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. முதலில் பலரும் ஆந்திராவில் உள்ள பல்கலைக்கழகம் தமிழ் பட்டம் வழங்கும என சந்தேகப்படுகிறார்கள். இரண்டாவதாக, தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் உள்ளவர்கள் இவ்வளவு தூரம் சென்று, வெளிமாநிலத்தில் தங்கி படிக்க வேண்டுமா என நினைக்கிறாரகள். அவர்களுக்கு இங்கு பெறும் பட்டத்தின் மதிப்பு தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும்." எனவும் விஷ்ணுகுமாரன் ஆதங்கப்படுகிறார்.
திராவிடப் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் மொழி மற்றும் மொழிபெயர்ப்புத்துறையில் ஆண்டுதோறும் 20 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். முதுகலைப் பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம் மற்றும் முனைவர் பட்டம் ஆகியவற்றை இத்துறையில் மேற்கொள்ளலாம். "இங்கு தமிழ் முதுகலைப்பட்டம் பெற்ற பலர் தமிழ்நாட்டில் வேலையில் உள்ளனர். போதிய வசதிகள் செய்து தரப்படுகின்றன. தமிழக அரசு இந்த ஆண்டு 4.5 கோடி ரூபாய் செலவில் கலை நூலகம் ஒன்றை அமைத்துள்ளது. 12 ஆண்டுகளாக, அரசே மாணவர்களின் கல்வி மற்றும் தங்கும் செலவை ஏற்றுள்ளது." என்றும் விஷ்ணுகுமாரன் கூறுகிறார். பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த ஆண்டு செய்ததைப் போல இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கை அவகாசத்தை ஜூன் மாதமே முடிக்காமல் ஜூலை வரை நீடித்திருக்கலாம் எனவும் விஷ்ணுகுமாரன கருதுகிறார். அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு முன் பிப்ரவரி மாத மத்தியில் இங்கு உள்ள வாய்ப்புகள் பற்றி தமிழ்நாட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றும் இங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு உறுதியைக் கொடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார் விஷ்ணுகுமாரன்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews