அகில இந்திய தேர்வு மூலமாக கீழமை நீதிபதிகள் நியமனம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 30, 2019

அகில இந்திய தேர்வு மூலமாக கீழமை நீதிபதிகள் நியமனம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
IAS, IPS போன்று IJS: அகில இந்திய தேர்வு மூலமாக கீழமை நீதிபதிகள் நியமனம்? ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்று ஐஜேஎஸ் எனும் இந்திய நீதித்துறைப் பணியை புதிதாக உருவாக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனால் குற்றவியல் நடுவர்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் என கீழமை நீதிமன்ற நீதிபதிகளை அகில இந்திய தேர்வு மூலமாக மத்திய அரசே நேரடியாக நியமிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவில் நீதி பரிபாலனம் சிறந்து விளங்க கீழமை நீதிமன் றங்களில் தகுதியும், திறமையும் உள்ளவர்கள் நீதிபதிகளாக பணியமர்த்தப்பட வேண்டும் என்றும், இதற்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் போலவே இந்தியன் ஜூடிசியல் சர்வீஸ் (ஐஜேஎஸ்) எனும் இந்திய நீதித்துறைப் பணிப்பிரிவை புதிதாக உருவாக்க வேண்டும். அதன்படி கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கான பதவிகளுக்கு அகில இந்திய அளவில் தேர்வு நடத்தப்பட வேண்டும். அந்தப் பொறுப்பை மத்திய பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என நிதிஆயோக் அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தற்போது உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் பரிந்துரை செய்கிறது. அந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்று, அதன்பிறகு தேர்வு செய்யப்படும் நீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார். இவ்வாறு நியமிக்கப்படும் நீதிபதிகளை மக்களவையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றி மட்டுமே பதவி நீக்கம் செய்ய முடியும். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், உயர் நீதிமன்றங்களுக்கான கட்டமைப்பு மற்றும் செலவினங்கள் அனைத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. போட்டித் தேர்வு ஆனால் அந்தந்த மாநிலங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களைப் பொருத்தமட்டில் மாவட்ட நீதிபதி களை உயர் நீதிமன்றமும், அதற்குக் கீழ் உள்ள குற்றவியல் நடுவர்கள் மற்றும் உரிமையியல் நீதிபதி களை மாநில தேர்வாணையங் களும் போட்டித்தேர்வு நடத்தி அதன் மூலமாக தேர்வு செய் கின்றன.
இந்த கீழமை நீதிபதிகள் மாநில அரசால் நியமிக்கப்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் கையில் உள்ளது. கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் தொடர்பாக மாநில அர சிடம் உள்ள இந்த அதிகாரத்தை மத்திய அரசு தற்போது கையில் எடுக்கத் திட்டமிட்டுள்ளது. ஐஜேஎஸ் எனும் புதிய பிரிவை உருவாக்கி அதன்மூலம் தேர் வாகும் நீதிபதிகளை இந்தியா வின் எந்த மூலையிலும் பணியமர்த்துவது என்பதுதான் மத்திய அரசின் நோக்கம். மத்திய அமைச்சர் ஆலோசனை இதுதொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஏற்கெனவே மத்திய அரசு அதிகாரிகளுடனும், நீதித்துறை வட்டாரங்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை செயலாளர் அலோக் வத்சவா அனைத்து மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கடந்த 19-ம் தேதி எழுதியுள்ள கடிதத்தில் ஐஜேஎஸ் தொடர்பான கருத்தை தெரிவிக்க வலியுறுத்தியுள்ளார். ஐஜேஎஸ் என்ற இந்தத் திட்டம் ஏற்கெனவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது கடந்த 2009 மற்றும் 2013-ல் நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில் விவாதிக் கப்பட்ட ஒன்றுதான் என்றாலும், மாநிலங்களின் எதிர்ப்பு காரண மாக அப்போது நிறை வேற்றப் படவில்லை. தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள பாஜக அரசு ஐஜேஎஸ் திட்டத்தை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews