👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் எனும் இளநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ம் தேதி நடந்தது.
கடந்த காலங்களில் சி.பி.எஸ்.இ அமைப்பானது நீட் தேர்வு நடத்திய நிலையில், இந்த ஆண்டு முதல் இதற்கென தேசிய தேர்வு முகமை உருவாக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது.
எனினும், நீட் தேர்வு நடந்த அன்று கர்நாடகாவில் ரயில் தாமதம் காரணமாக சுமார் 600 மாணவர்கள் தேர்வு எழுத முடியவில்லை. மேலும், ஒடிசா மாநிலத்தில் போனி புயல் காரணமாக நீட் தேர்வு திட்டமிட்டபடி நடக்கவில்லை.
மேற்கண்ட இரு காரணங்களால் 5-ம் தேதி எழுத முடியாதவர்களுக்கு 20-ம் தேதி மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வு எழுதியதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமையின் இணையதளமான
ntaneet.nic.in -ல் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மேலும், மருத்துவ கவுன்சிலின் இணையதளமான
mcc.nic.in -லும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் 1.35 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 59,785 பேர் அதாவது 48.57% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேசிய அளவில் தமிழக மாணவர் கார்வண்ணபிரபு 5-ம் இடம் பிடித்துள்ளார். மாற்றுத்திறனாளி மாணவர்கள் பிரிவில் இவர் தேர்வு எழுதியிருந்தார்.
எனினும், பொதுப்போட்டி பிரிவில் தேர்வு எழுதியவர்களில் முதல் 50 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இடம் பிடிக்கவில்லை.
மாணவியருக்கான பட்டியலை மட்டும் கணக்கில் கொண்டால் தமிழகத்தச் சேர்ந்த ஸ்ருதி என்ற மாணவி 10-ம் இடம் பிடித்துள்ளார்.
தமிழக அளவில் ஸ்ருதி 685 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்தாண்டு நடந்த தேர்வில் 39.56% பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 7,97,042 பேர் அதாவது 56.50% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிகபட்சமாக டெல்லியில் 74.92% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பொதுப்பிரில் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 134 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஓபிசி, எஸ்சி, எஸ்டி மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண்ணாக 107 எடுக்க வேண்டும்.
மாற்றுத்திறன் மாணவர்கள் குறைந்தபட்சம் 120 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U