பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கதர் சீருடைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 12, 2019

பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கதர் சீருடைகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முதல் கட்டமாக சோதனை முறையில் இந்தத் திட்டம் நான்கு மாவட்டங்களில் மட்டும் அமல்படுத்தப்பட உள்ளது. மாநிலத்தின் தலைநகரான லக்னோவைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகளும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற உள்ளனர். உத்தரப் பிரதேச மாநில அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டு வகுப்புகள் வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கதிர் சீரூடை கொடுக்க முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக சோதனை முறையில் இந்தத் திட்டம் நான்கு மாவட்டங்களில் மட்டும் அமல்படுத்தப்பட உள்ளது. மாநிலத்தின் தலைநகரான லக்னோவைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகளும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற உள்ளனர். இது குறித்து மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் ரேணுகா குமார் கூறுகையில், "உத்தரப் பிரதேச கதர் மற்றும் கிராம நிறுவனங்களின் வாரியம் (Uttar Pradesh Khadi & Village Industries Board) இத்திட்டத்துக்கான கதர் ஆடைகளை மாணவ மாணவிகளுக்கு வழங்க உள்ளது. ஒவ்வொருவருக்கும் இத்திட்டத்தின் வாயிலாக இரண்டு செட் கதர் சீருடைகள் இலவசமாக தரப்படும். ஒரு செட் ரூ.300 மதிப்பிலானது. இதன் மூலம் ஒரு செட் சீருடைக்கு கடந்த ஆண்டைவிட 100 ரூபாய் அதிகம் செலவாகிறது." எனத் தெரிவித்தார்.
"லக்னோவில் உள்ள மோகன்லால்கஞ்ச், சீதாபூரில் உள்ள சிந்தோலி, மிர்சாபூரில் உள்ள சான்பே, பஹ்ராய்ச்சில் உள்ள விசேஷ்வர்கஞ்ச், மஹாசி, மதேரா ஆகிய பகுதியில் இருக்கும் அனைத்து பள்ளிகளிலும் இந்த சோதனைத் திட்டம் வரும் கல்வி ஆண்டிலேயே ஆரம்பிக்கிறது." எனக் கூறிய அவர் சீருடைக்கான துணியின் தரம் மற்றும் அம்சங்கள் பற்றி கதர் மற்றும் கிராம நிறுவனங்களின் வாரியம் முடிவு செய்யும் என்றார். மாணவர்களுக்கு பழுப்பு நிற அரை கால் சட்டையும் சிகப்பு நிறத்தில் கட்டம் போட்ட சட்டையும் வழங்கப்படும். மாணவிகளுக்கு பழுப்பு நின்ற ஸ்கர்ட் மற்றும் பழுப்பு நிற காலருடன் சிவப்பு நிற மேல்சட்டை கொடுக்கப்படும். சீருடைகளை வாங்க முதல் தவணைத் தொகையாக 75% பணத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள எல்லா பள்ளிகளுக்கும் அரசே வழங்கும். பள்ளி நிர்வாகம் மூலமே சீருடைகள் மாணவ மாணவிகளுக்கு விநியோகம் செய்யப்படும்.
இத்திட்டத்தை மேற்பார்வை செய்ய மாவட்ட அளவில் ஒரு கண்காணிப்புக் குழு அமைக்க்படும். இந்தக் குழுவில் மாவட்ட மாஜிஸ்திரேட், தலைமை மேம்பாட்டு அதிகாரி, மாவட்ட நிறுவனங்கள் மையத்தின் பொது மேலாளர் மற்றும் தலைமைப் பொருளாளர், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன தலைவர், மாவட்ட அடிப்படைக் கல்வி அதிகாரி, மாவட்ட பள்ளி ஆய்வாளர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் அதிகாரி ஆகியோர் இடம் பெறுவராகள். உத்தரப் பிரதேசத்தில் உள்ள மொத்தம் 1.58 லட்சம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1.50 கோடிக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயில்கிறார்கள். 71 மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கும் மத்திய நெசவுத்துறை அமைச்சகத்தின் கீழ் நெசவு குழு மூலம் சீருடைகள் வழங்கப்படும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews