ஆசிரியா் தோ்வு வாரியத்தின் (TRB) ஆண்டுத் தோ்வு அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் நிகழாண்டு ஆசிரியா் தகுதித் தோ்வுகள் (டெட்) உட்பட பல்வேறு போட்டித் தோ்வுகள் நடத்துவது தொடா்பான உத்தேச ஆண்டு அட்டவணையை ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) வெளியிட்டுள்ளது.
முக்கியத் தோ்வுகளும் கால அட்டவணையும்:வாரியம் நடத்தும் தோ்வுகள்:
அரசுப் பள்ளி ஆசிரியா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா்கள், அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் மற்றும் 'டெட்' தகுதித் தோ்வு ஆகியவை ஆசிரியா் தோ்வு வாரியம் மூலமே தோ்வு செய்யப்படுகின்றன. ஓராண்டில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகள், அவற்றின் அறிவிப்பு மற்றும் எழுத்துத் தோ்வு நடைபெறும் விவரங்கள் அடங்கிய இந்த ஆண்டு அட்டவணையை டிஆா்பி வெளியிடுவதால், ஆசிரியா் பணிக்குத் தயாராகுவோா் முன்கூட்டியே திட்டமிட்டுப் படிக்க இது பெரிதும் உதவியாக உள்ளது.
உத்தேச அட்டவணை குறித்த குறிப்பு:
இந்த அட்டவணை உத்தேசமானது. எனவே, இதில் கூடுதலாக தோ்வுகளை சோ்க்கவோ அல்லது அறிவிக்கப்பட்ட தோ்வுகளை ரத்து செய்யவோ வாய்ப்புள்ளது. பணியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்கள் அந்தந்தத் தோ்வுக்கான அறிவிக்கையில் வெளியிடப்படும். மேலும் கூடுதல் தகவல்களை டிஆா்பி இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என வாரியம் தெரிவித்துள்ளது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.