இடைநிலை ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினால் தன்னிச்சையாக அனுமதிக்க வேண்டாம்
பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
சென்னை, ஜன. 20: சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையிலும்,
பிற மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர் கள் மீண்டும் பணிக்குத் திரும்பினால் அவர்களை தன்னிச்சையாக அனுமதிக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் 26-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதனிடையே, தொடக்கக் கல்வித் துறை சார்பில் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு மீண்டும் திரும்பி வரும்போது அவர்கள் மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக் கக் கல்வி) அனுமதியைப் பெற்ற பின்னரே பணியில் சேர வேண்டும். தன்னிச்சையாக வட்டாரக் கல்வி அலுவலரோ, பள்ளித் தலைமை ஆசிரியரோ சம்பந்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை பணியில் சேர அனுமதிக்கக் கூடாது என திட்ட வட்டமாக தெரிவிக்கப்படுகி றது என கல்வித்துறை அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆலோசனை: இதனிடையே பள்ளிக்கல்வித் துறை
வளர்ச்சித் திட்டங்கள், அறிவிப்புகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் சென்னை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.