எய்ம்ஸ் எம்பிபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: aiimsexams.org - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 12, 2019

எய்ம்ஸ் எம்பிபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: aiimsexams.org

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எய்ம்ஸ் (AIIMS) எனப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (All India Institute of Medical Science) சேர்ந்து எம்பிபிஎஸ் (MBBS) படிப்பதற்கான நுழைவுத்தேர்வு எழுதியவர்கள் aiimsexams.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம். 2019 எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று எய்ம்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாக உள்ளன. எய்ம்ஸ் (AIIMS) எனப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (All India Institute of Medical Science) சேர்ந்து எம்பிபிஎஸ் (MBBS) படிப்பதற்கான நுழைவுத்தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு இந்த எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு இரண்டு ஷிப்டுகளாக மே 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் நடைபெற்றன.
இத்தேர்வின் முடிவுகள் இன்று (ஜூன் 12) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வை எழுதியவர்கள் aiimsexams.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம். எய்ம்ஸ் நுழைவுத்தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பப் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு எய்ம்ஸ் எம்பிபிஎஸ் தேர்வு முடிவுகளைக் காண முடியும்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். ஆன்லைன் கலந்தாய்வில் இடங்களை ஒதுக்குவதற்கான அட்டவணை அதிகாரப்பூர்வ இணையதளத்திலேயே வெளியிடப்படும். ஆன்லைன் கலந்தாய்வு முடிவுகள் ஜூன் 18ஆம் தேதி எய்ம்ஸ் இணையதளத்தில் தெரியவரும். “ஆன்லைன் கலந்தாய்வில் எம்பிபிஎஸ் படிப்புக்குத் தேர்வான மாணவர்களின் உத்தேசப் பட்டியல் ஜூன் 18, 2019 அன்று வெளியாகும். தேர்வான மாணவர்களுக்கான வரிசை எண்களை எய்ம்ஸ் இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம்” என எய்ம்ஸ் தெரிவித்திருக்கிறது. தேர்வான மாணவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் எம்ய்ஸ் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். அங்கு அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். உடல்நலத் தகுதி இல்லாத மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்புக்கான தகுதியை இழக்க நேரிடும்.
அந்த எம்ய்ஸ் மருத்துவமனையில் உள்ள மருத்துவ வாரியம் இந்த மருத்துவ ப் பரிசோதனையை நடத்தும். உடல்நலத் தகுதி விஷயத்தில் மருத்துவ வாரியம் எடுக்கும் முடிவே இறுதியானது. எம்பிபிஎஸ் படிப்புக்கான வகுப்புகள் வரும் ஆகஸ்ட் 1, 2019 முதல் தொடங்கும் எனவும் ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறது. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த தகவலும் தெரிவிக்கப்படாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், அந்த மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை எய்ம்ஸ் இணையதளத்தில் பார்க்க முடியும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews