கேட்ட இடத்தில் எல்லாம் ஆதார் எண்ணை கொடுப்பவரா நீங்கள்? இந்த முக்கிய தகவல் உங்களுக்கு தான்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 13, 2019

கேட்ட இடத்தில் எல்லாம் ஆதார் எண்ணை கொடுப்பவரா நீங்கள்? இந்த முக்கிய தகவல் உங்களுக்கு தான்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆதார் கார்டு தவிர மற்ற எதை வாங்க வேண்டுமென்றாலும் அதற்கு ஆதார் தேவை என்றாகிவிட்டது. ஆம்புலன்ஸ் தொடங்கி அத்தனை அத்தியாவச தேவைகளுக்கும் ஆதார் எண் தேவை. அப்படியென்றால், ஆதார் கார்டு எப்போது நமக்குத் தேவைப்படும் என்பதை சொல்லவே முடியாது. எந்த நேரமும் என்கையில் இருக்க வேண்டும். ஒருவேளை ஆதார் தொலைந்துப் போனால்? லைசென்ஸ், பாஸ்போர்ட்டுடன் ஒப்பிடும்போது டூப்ளிகேட் ஆதார் கார்டு வாங்குவது எளிமையான ஒன்று என்பதுதான் இதில் ஒரே ஆறுதலான விஷயம்.இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம், ஆதார் எண் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய இனையதளத்தில் வசதி அளித்துள்ளது. ஒருவரது ஆதார் எண் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய அவர் ஆதார் இணையதளம் மூலம் எளிதாக அறிந்துக்கொள்ளலாம். எப்போ, எங்கு உங்கள் ஆதார் எண் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து தகவல்கள் எளிதாக பெறலாம்.உங்கள் ஆதார் எண் எங்கு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள resident.uidai.gov.in/notification-aadhaar.in இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளவும்.
இதற்கிடையில் நமது ஆதார் தகவல் பணத்திற்காக லீக் செய்யப்படுகிறது என்ற செய்தி சமீபத்தில் தீயாய் சமூக வலைதளங்களில் பரவியது. இதன் பொறுப்பேற்று UIDAI ஆதார் தகவல் எதுவும் இணையத்தில் கசிய வில்லை என்று தெரிவித்தது.உங்கள் கார்டு யாரால் பயன்படுத்தப்பட்டது, எதற்காகப் பயன்படுத்தப்பட்டது, உங்கள் ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சந்தேகம் இருந்தால் உங்கள் ஆதார் கார்ட்டை லாக் செய்யலாம்.உங்கள் ஆதார் எண் மற்றும் ஸ்கரீனில் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் குறியீட்டினை கொடுத்து 'Generate Otp' என்ற பொத்தானை தட்டவும். பின்னர் ஆதாருடன் இணைக்கப்பட்டு உள்ள மொபைல் எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவு சொல்லினை உள்ளிடவும். முக்கியமாக உங்கள் ஆதார் கார்டுடன் மொபைல் எண் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.இந்த பாஸ்வேர்ட் தான் உங்கள் ஆதாரை பாதுகாக்கும் போட்டு போன்றது. இந்த பாஸ்வேர்ட்டை மட்டும் எந்த காரணத்திற்காகவும் மற்றவர்களிடம் பகிராமல் இருந்தாலே போதும். யார் நினைத்தாலும் உங்களது ஆதார் தகவல்களை உங்களுக்கு தெரியாமல் திருட முடியாது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews