முதியவர்கள், பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவு! - புதுக்கோட்டையில் அசத்தும் விஜய் மக்கள் இயக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 30, 2019

முதியவர்கள், பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவு! - புதுக்கோட்டையில் அசத்தும் விஜய் மக்கள் இயக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதுக்கோட்டையில், தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் ரசிகர்கள் ஒன்றுசேர்ந்து, தினமும் நூற்றுக்கணக்கான ஏழை எளிய முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக காலை உணவு வழங்கி அசத்துகின்றனர். ஜூன் 22-ம் தேதி, நடிகர் விஜயின் 45-வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் உள்ள தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர், ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். அன்று, ஏழை எளியவர்களுக்கு இலவசமாக உணவு அளித்தல், மாணவ, மாணவிகளுக்கு பேனா பென்சில் கொடுத்தல், குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குதல் எனப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்தனர். இந்த நிலையில் தான், அதன் தொடர்ச்சியாக வருடம் முழுவதும் மக்களுக்கு உணவு அளிக்கும் வகையில் பல்வேறு மாவட்டங்களிலும் 'தளபதி விஜய் விலையில்லா விருந்தகம்' என்ற திட்டத்தை ஆரம்பித்து, தினமும் நூற்றுக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக காலை உணவு வழங்கிவருகின்றனர்.
புதுக்கோட்டையில், ஜூன் 22-ம் தேதி நடைபெற்ற நடிகர் விஜய் பிறந்தநாள் நிகழ்ச்சியில், தளபதி விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு, 'தளபதி விஜய் விலையில்லா விருந்தகத்தைத் தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மேல 3-ம் வீதியில் உள்ள விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைமை அலுவலகத்தில், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்கள் எனத் தினமும் நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு காலையில் இலவசமாக உணவு வழங்கப்பட்டுவருகிறது.
இதுபற்றி தளபதி விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் பர்வேஸ் கூறும்போது, " நாம் அனைவருக்கும் உணவு என்பதுதான் மிக முக்கியமான ஒன்று. பசியில் வாடுபவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில்தான் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து ரசிகர்களும் ஒன்றிணைந்து இந்தப் பணியைச் செய்கிறோம். வருடம் முழுவதும், தினமும் 109 பேருக்குதான் காலை உணவு வழங்குவதாகத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், புதுக்கோட்டையைப் பொறுத்தவரை தினமும் 130 பேர் வரையிலும் வருகின்றனர். அதில், 70பேர் வரையிலும் வாடிக்கையாக வருகின்றனர். தினமும் புதிதாகப் பலரும் வருகின்றனர். அவர்களுக்காக, கூடுதலாகவே உணவு தயார்செய்கிறோம்.
சாப்பாடு கேட்டு யார் வந்தாலும், அவர்களை வெறும் கையோடு அனுப்புவதில்லை. தற்போது இட்லி, சட்னி, சாம்பார் வழங்கப்படுகிறது. சுழற்சி முறையில் பொங்கல், வடை உள்ளிட்டவற்றையும் வழங்க உள்ளோம். பள்ளி மாணவர்கள், முதியவர்களுடன், திருநங்கைகளும் மாற்றுத்திறனாளிகளும் ஆர்வமுடன் வந்து சாப்பிடுகின்றனர். ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து, மதிய உணவு உள்ளிட்ட பல திட்டங்களைக் கொண்டுவர உள்ளோம்" என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews