👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
பிளஸ் 2 முடித்து உயர் கல்வியில் இன்ஜினியரிங் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு எந்த பாடப் பிரிவுகளை எந்த கல்லுாரியில் தேர்வு செய்தால் சிறப்பான எதிர்காலம் அமையும் என வழிகாட்டும் தினமலர் &'உங்களால் முடியும்&' நிகழ்ச்சி மதுரை, திண்டுக்கல், தேனி, ராஜபாளையத்தில் நடக்கின்றன.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜி., கல்லுாரிகளில் பி.இ., பி.டெக்., படிப்புகளில் சேர தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மூலம் கவுன்சிலிங் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க உள்ள மாணவர்கள் எவ்வாறு தயாராக வேண்டும் என்ற நோக்கில் தினமலர் சார்பில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதில் உயர் கல்வி பாடப்பிரிவுகள்/கல்லுாரிகள் தேர்வு குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி, இன்ஜி., அட்மிஷன் தொடர்பாக போடி அரசு பொறியியல் கல்லுாரி முதல்வர் பேராசிரியை ஜெயந்தி ஆகியோர் பேசுகின்றனர்.ஆன்லைன் கவுன்சிலிங் உள்ளிட்ட மாணவர்களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும் இந்நிகழ்ச்சியில் அவர்கள் நேரடியாக பதில் அளிக்க உள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் நிகழ்ச்சியில் தீர்வு கிடைக்கும்.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் தொடர்பான இலவச கையேடு வழங்கப்படும். அனுமதி இலவசம். சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இந்நிகழ்ச்சியை இணைந்து வழங்குகிறது.
எங்கே... எப்போது...
மதுரை ஜூன் 8
மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, பசுமலை,
காலை 10:00 - 12:00 மணி.
திண்டுக்கல் ஜூன் 8:
வி.ஜி.எஸ்.மகால்,
வாழ்க வளமுடன் தெரு (பஸ் நிலையம் அருகில்) மாலை 4:00 - 6:00 மணி.
ராஜபாளையம் ஜூன் 9:
ஆனந்த் திருமண மாளிகை, டிபி.மில்ஸ் ரேடு, போஸ்ட் ஆபீஸ் எதிரில், காலை 10:30 - 12:30 மணி.
தேனி ஜூன் 9:
அன்னப்பராஜா திருமண மண்டபம், என்.ஆர்.டி., நகர், மாலை 4:00 - 6:00 மணி.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U