👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
மருத்துவ துறையில் கொஞ்சம், கொஞ்சமாக பல உட்பிரிவுகள் உருவாகி, இன்று ஏராளாமான வாய்ப்புகளை தருமளவிற்கு பரந்து விரிந்துள்ளது. அத்தனை பிரிவுகளுக்கும் எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளை படித்திருக்க வேண்டிய அவசியமில்லை; துணை மருத்துவப் படிப்புகளை படித்தவர்களுக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
ஒரு மருத்துவமனை சிறப்பாக இயங்கவும், ஒருவது நோயின் தீவரத்தை அறியவும், சரியான பரிசோதனை செய்யவும், தரமான சிகிச்சை அளிக்கவும், துணை மருத்துவப் படிப்புகளை படித்தவர்கள் இன்று பல நிலைகளில், அதிகளவில் தேவைப்படுகின்றனர். எந்த ஒரு முக்கியமான அறுவை சிகிச்சையிலும், டாக்டர்களுக்கு மிக உதவிகரமாக செயல்படுபவர்களும் துணை மருத்துவப் படிப்புகளை படித்தவர்களே! டெக்னீசியன்களை மட்டுமே எடுத்துக்கொண்டால் கூட, ரெஸ்ப்ரேட்டரி டெக்னீசியன், கார்டியோவஸ்குலர் டெக்னீசியன், அனஸ்தீசியா டெக்னீசியன், டயாலசிஸ் டெக்னீசியன் போன்றவர்களின் தேவை அதிகம் உள்ளது.
பி.ஓ.டி., எனும் &'பேச்சுலர் ஆப் ஆக்குபேஷனல் தெரப்பி&' படித்தவர்கள் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் சிகிச்சை அளிக்க அதிகளவில் தேவைப்படுகின்றனர். எந்த ஒரு மாற்றுத்திறனாளியும் யாரது உதவியும் இன்றி சுயமாக செயல்படவே விரும்புகிறார். அதன்படி, ஒருவரது இயலாமையை நிவர்த்தி செய்வதில், &'ஆக்குபேஷனல் தெரப்பிஸ்ட்’கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
அதேபோல, பி.பி.டி., எனும் பேச்சுலர் ஆப் பிசியோதெரபி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் இன்று ஏராளம். ஒரு மருத்துவமனையில் முழுநேரமாக பணிபுரிவதைவிட, சுயமாக செயல்படவே பல பிசியோதெரபிஸ்ட்களும், ஆக்குபேஷனல் தெரப்பிஸ்ட்களும் விரும்புகின்றனர். அவ்வாறு சுயமாக செயல்படும்போது, திறமைக்கு ஏற்ற வருமானத்தை அவர்களால் பெற முடிகிறது. தொழில்நுட்ப நிறுவனங்கள்கூட இன்று, விளையாட்டு துறையில் கால்பதிக்கத்துவங்கியுள்ள சூழலில், &'ஸ்போர்ட்ஸ் மெடிசின்’ படிப்பை தேர்வு செய்வதும் நல்ல எதிர்காலத்தை உறுதிப்படுத்தும். இதுபோன்று, இன்று ஏராளமான பணிவாய்ப்புகள் மருத்துவத்துறையில் உருவாகி உள்ளன.
தொடர்பியல் திறன் அவசியம்
பொதுவாக மருத்துவ துறையை சார்ந்தவர்கள், சிறந்த ஆங்கில மொழித்திறன் பெறறிருந்தால் அதிகமான ஊதியம் பெற முடியும். அவர்களுக்கு, வெளிநாடுகளில் வாய்ப்புகள் பிரகாசமாக அமையும். ஆங்கிலம் படித்தால் தான் வாய்ப்புகள் அதிகமா? என்ற சர்ச்சைக்குள் நான் செல்ல விருப்பமில்லை என்றபோதிலும், ஆங்கில மொழித் திறன் பெற்றவர்களுக்கு வாய்ப்புகள் விசாலாமாக உள்ளதை யாராலும், மறுக்க முடியாது. எந்த ஒரு பணியிலும், அது ’கார்பெண்டிங்’ பணியாக இருந்தால் கூட, ஆங்கில தொடர்பியல் திறன் பெற்றவர்களுக்கு வரவேற்ப்பும், ஊதியமும் அதிகமே!
-டாக்டர் தீபக் நல்லசாமி, டைரக்டர் ஆப் அகடமிக்ஸ், சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்சஸ், சென்னை.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U