பட்டதாரி இளைஞர்களின் கனவை நனவாக்க, தினமலர் நாளிதழ் மற்றும் சங்கர், ஐ.ஏ.எஸ்., அகாடமி இணைந்து, அறம் பொருள் ஐ.ஏ.எஸ்., நிகழ்ச்சியை, சென்னையில், வரும் 9ம் தேதி நடத்துகின்றன.
லஞ்சம்
மத்திய பணியாளர் தேர்வாணையம், ஐ.ஏ.எஸ்., - ஐ.எப்.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, மத்திய அரசு பணிகளுக்கான தேர்வை நடத்தி வருகிறது. நம் நாட்டில், கல்வி, மருத்துவம் உட்பட, அரசு துறைகளில், எந்த சேவையை பெற வேண்டுமானாலும், லஞ்சம் கொடுத்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது.
தலைவிரித்தாடும் லஞ்சம் வாங்கும் செயல், படித்த இளைஞர்களிடம் கோபத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள், ஒரு ரூபாய் கூட லஞ்சம் பெறாமல், மக்களுக்கு சேவையாற்ற, அதிகாரமிக்க, ஆட்சி பணி அதிகாரிகளாக பணிபுரிய வேண்டும் என்ற கனவுடன் உள்ளனர். ஆனால், அதற்கு எப்படி தேர்வாவது என, தெரியாமல் உள்ளனர். இந்த சூழலில், புரையோடி கிடக்கும் சமூகத்தை சீர்படுத்த, இளைஞர்களை, ஆட்சி பணி அதிகாரிகளாக உருவாக்கும் முயற்சியில், &'தினமலர்&' நாளிதழ் களம் இறங்கியுள்ளது.
வாணி மஹால்
இதற்காக, இளநிலை பட்டம் படித்த மற்றும் படிக்கும் மாணவர்களை, ஆட்சி பணியில் அதிகாரிகளாக அமர்த்த, &'தினமலர்&' நாளிதழ் மற்றும் சங்கர், ஐ.ஏ.எஸ்., அகாடமி உடன் இணைந்து, &'அறம் பொருள் ஐ.ஏ.எஸ்., - ஆட்சி பணிக்கு வழிகாட்டும் அர்த்தமுள்ள சந்திப்பு&' என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளது.
இந்நிகழ்ச்சி, சென்னை, தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள, வாணி மஹாலில், வரும், 9ம் தேதி ஞாயிற்று கிழமை, காலை, 9:30 மணி முதல், 12:30 மணி வரை நடக்கிறது.அதில், எல்.எம். இ.எஸ்., அகாடமியின் அறிவியல் கல்வியாளர், பிரேம் ஆனந்த் சேதுராஜன், ஊக்க உரையாற்றுகிறார். தேர்வு தொடர்பாக, இந்திய வருவாய் துறை அதிகாரி, பூ.கொ.சரவணன் ஆலோசனை வழங்குகிறார்.
கேள்வி - பதில்
மேலும், சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியின் இயக்குனர், டாக்டர் வைஷ்ணவி சங்கர், ரயில்வே டி.ஜி.பி., சைலேந்திர பாபு ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.நிகழ்ச்சியில், மாணவர்கள், பெற்றோர்கள் எழுப்பும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு, சிறப்பு விருந்தினர்கள், பதில் அளிக்கும் வகையில், கேள்வி - பதில் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.
முன்பதிவு ஜோர்!
நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் பட்டதாரிகள் மற்றும் பட்ட படிப்பு படிக்கும் மாணவர்கள், தங்கள் பெயர், மொபைல் போன் எண் ஆகிய விபரங்களை, 83001 89000 என்ற மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி, முன்பதிவு செய்ய வேண்டும். பலரும், ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், இருக்கைகள் ஒதுக்கப்படும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U