👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

ஐக்கிய அரபு எமிராட்ஸை சேர்ந்த பெண், தனது திருமண வாழ்க்கை தோல்வியில் முடிவடைந்ததாகவும், இதனால் தனது குழந்தைகளுக்கு உதவுமாறும் சமூக வலைத்தளங்களில் பலரிடம் உதவி கோரியுள்ளார். இதன் மூலம் 17 நாட்களில் ரூ.34 லட்சம் பெற்றுள்ளார்.
ஆனால் அம்மணிக்கு அப்போது தெரியவில்லை போலும் இப்படி ஒரு சூழ்நிலை வருமென்று. ஆமாப்பு.. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் தனது திருமணம் தோல்வியடைந்து விட்டதாகவும், தன்னையும் தனது குழந்தைகளையும் ஊக்குவிக்க வேண்டும்.
அதோடு அவர்களை வழி நடத்தி செல்ல பண உதவி செய்யுங்கள் என்றும் பலரிடம் கேட்டிருக்கிறார்.
இது குறித்து துபாய் போலிஸ் அதிகாரி கூறுகையில், இந்த பெண் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் என சமூக வலைதளங்களில் ஏமாற்றி 17 நாட்களில் மட்டும் 50,000 டாலர்களை (இந்திய ரூபாயில் 34 லட்சம்) பணம் சம்பாதித்ததாக கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து துபாய் போலீஸின் குற்றவியல் புலனாய்வுத் தினைக்களத்தின் அதிகாரி Brigadier Jamal Al Salem Al Jallaf கூறுகையில், இந்த பெண்மணி ஆன்லைனில் சமூக வலைதளங்களில் கணக்குகளை துவங்கி அதில் தங்களது குழந்தைகள் என போட்டோகளையும் போட்டு, அதன் மூலம் பிச்சை எடுத்துள்ளார் இந்த தில்லாங்கடி பெண்.
அதோடு தான் தன் கணவருடன் விவாகரத்து செய்ததாகவும், தனது குழந்தைகள் தன்னுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் அந்த அம்மணியின் கணவரோ தனது மனைவியும் தானும் பிரிந்து வாழ்வதாகவும், குழந்தைகள் தன்னுடன் இருப்பதாகவும் நீருபித்துள்ளார். ஆமாப்பு இ-கிரைம் பிளாட்பார்ம் மூலம் கூறியுள்ளார்.
அதோடு அவரின் குழந்தைகளின் போட்டோவை வைத்து, பிச்சை எடுப்பதாகவும், அதை அம்மணியின் கணவரின் நண்பர்களும், உறவினர்களும் கூறியுள்ளனர். இதன் பின்னரே கணவர் கூறிய ஆதாரங்களை வைத்தே அம்மணியை துபாய் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த தில்லாங்கடி அம்மணி அவரின் கணவரை குறை கூறி, ஒரு சிம்பதியை ஏற்படுத்துவதன் மூலம் 17 நாட்களில் 34 லட்சம் வரையில் சம்பாதித்துள்ளாராம்.
இது குறித்து துபாய் போலீஸ் கூறுகையில் நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக உடல் நிலை சரியில்லை என்றும், உடல் ஊனமுற்றவர் என்றும், மிக வறுமையில் உள்ளார் என்றும் மக்களின் கொடைத் தன்மையை அறிந்து கொண்டு ஏமாற்றுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்கள்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U