கேஸ், ரேசன் மானியம்: வங்கிக் கணக்கில் பணம் போட்டதால் அரசுக்கு ரூ 1.41 லட்சம் கோடி மிச்சம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 12, 2019

கேஸ், ரேசன் மானியம்: வங்கிக் கணக்கில் பணம் போட்டதால் அரசுக்கு ரூ 1.41 லட்சம் கோடி மிச்சம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பயனாளிகளின் மானியத்தொகையை அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தியதால், மத்திய அரசுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 1.41 லட்சம் கோடி ரூபாயும் கடந்த 2018-19ஆம் ஆண்டில் மட்டும் சுமார் ரூ.51.7 கோடி மிச்சமானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தியதன் மூலமாக நாடு முழுவதும் சுமார் 2.98 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை மானியத் தொகை வழங்கும் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முதல் முறையாக கடந்த 2014ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திவருகிறது. அதற்காக செலவழிக்கும் அனைத்தும் நேரடியாக மக்களுக்கும், பயனாளிகளுக்கும் நேரடியாக போய்ச் சேர வேண்டும் என்று மத்திய அரசு நினைத்தது. இதன் அடிப்படையிலேயே, அனைத்து மானிய உதவித் தொகையையும், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை கொண்டுவந்து செயல்படுத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளது. இதில் இடைத்தரகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் என யாருடைய தலையீடும் இல்லாமல் மத்திய அரசு வழங்கும் அனைத்து மானிய உதவித் தொகைகளும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகவே வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதில் மற்றொரு அம்சம் என்னவென்றால். பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக மானிய உதவித் தொகை செலுத்தப்பட்டதால், மத்திய அரசுக்கும் செலவு மிச்சமாகிறது. அதோடு போலிகளும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் பெயர்களும் மானிய உதவித் தொகை பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளன. கடந்த 2018-19ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 2.98 கோடி போலியான ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை உடனடியாக பயனாளிகளின் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டன.
மேலும் மானிய உதவித் தொகையை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தியதால், 4.23 கோடி போலியான எரிவாயு இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு அவையும் நீக்கப்பட்டன. கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இது வரையிலும் சுமார் 1.41 லட்சம் கோடி ரூபாய் வரையில் மிச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2018-19ஆம் ஆண்டில் மட்டுமே சுமார் 51 ஆயிரத்து 700 கோடி ரூபாய் வரையில் மிச்சம் பிடிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் தேசிய வேலை உறுதித் திட்டத்தின் (National employment guarantee scheme) மூலம் பயன்பெறும் போலிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் பெயர்களும் அந்த திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதே போல், நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கும் விளைச்சலுக்கு தேவையான உரமானிய உதவித் தொகையை அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்துவதற்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் ரூ.3 கோடி வரையிலும் செலவிட மத்திய அரசு, இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டது.
அதாவது விவசாயிகளுக்கான உரமானியமாக சுமார் ரூ.75 ஆயிரம் கோடி ரூபாயும், உணவு மானியமாக சுமார் ரூ.1.84 லட்சம் கோடியும், சமையல் எண்ணெய் மானியமாக சுமார் ரூ,37 ஆயிரத்து 500 கோடியும் வழங்க இடைக்கால பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டது. இதனாலும் மத்திய அரசுக்கு மிகப்பெரிய தொகை மிச்சமாகும் என்று தெரியவந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அரச அதிகாரிகள், மானியத் தொகையை 3 லட்சம் கோடி வரையிலும் அளிக்கவேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். உணவு மானியத் தொகை சற்று கூடுதலாக இருந்தாலும், உர மானியத் தொகையை வழங்குவது ஒரே சீரான அளவில் உள்ளது. இதன் மூலமும் மத்திய அரசுக்கு மிகப்பெரிய தொகை மிச்சமாகும் என்றும், இதற்கு முக்கிய காரணம் நேரடி மானிய பரிமாற்றம் (Direct Benefit Transfer) என்று தெரிவித்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் மானியத் தொகையை நேரடியாக பரிமாற்றம் செய்ததன் மூலமான சுமார் 7.33 லட்சம் கோடி ரூபாய் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews