👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
போக்குவரத்து துறை அனுமதி பெறாத, 1,971 பள்ளி வாகனங்களை இயக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், பள்ளி வாகனங்களில் உள்ள பாதுகாப்பு வசதிகளை, மே மாதம் முழுவதும், பள்ளி வாகன கண்காணிப்பு குழு ஆய்வு செய்தது. அக்குழுவில், போக்குவரத்து, கல்வி, காவல், வருவாய் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மொத்தம், 33 ஆயிரத்து, 17 வாகனங்களை சோதனை செய்ததில், நேற்று முன்தினம் வரை, 1,971 வாகனங்கள், தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளன. அந்த வாகனங்களை சீர்செய்து, பள்ளி வாகன கண்காணிப்பு குழுவின் தகுதிச் சான்றிதழ் பெறும் வரை, மாணவர்களை ஏற்றிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.மீறி பயன்படுத்தினால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என, போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U