👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
சென்னை: மருத்துவ முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேருபவர்கள், அரசுப் பணியாளர்கள் இருவரிடம் உத்தரவாதம் பெற வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சரவணன் தாக்கல் செய்த பொது நல மனுவில், முதுநிலை மருத்துவப் படிப்பு மற்றும் டிப்ளமோ மருத்துவப் படிப்புகளுக்கான விளக்கக் குறிப்பேட்டில் பல்வேறு நிபந்தனைகளை தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் விதித்துள்ளார். அதன்படி டிப்ளமோ மருத்துவப் படிப்பில் சேருபவர்கள், ரூ.20 லட்சம் வைப்புத்தொகை செலுத்த வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரருக்கு இணையான அல்லது உயர்பதவியில் உள்ள இரண்டு அரசுப் பணியாளர்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும். அதே போன்று மருத்துவ முதுநிலைப் படிப்பில் சேரும் விண்ணப்பதாரர்கள் இரண்டு அரசுப் பணியாளர்களின் உத்தரவாதத்துடன் ரூ.40 லட்சம் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் இந்த நிபந்தனை ஏழைகள் மற்றும் சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கும். இவர்களால் பெரும் தொகையை வைப்புத்தொகையாகச் செலுத்த முடியாது.
மேலும், இரண்டு அரசு அதிகாரிகளிடம் இருந்து உத்தரவாதத்தையும் பெற முடியாது. எனவே, இதுபோன்ற நிபந்தனைகள் மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் நபர்களுக்கு தேவையற்ற சுமையாக அமைந்துள்ளது. மேலும், இந்த உத்தரவாதம் அளிக்க ஒரு சில அதிகாரிகள் அதிகமான தொகையை லஞ்சமாகக் கூட கேட்கலாம். எனவே மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் இந்த நிபந்தனைகள் சட்ட விரோதமானது, ஒரு தலைபட்சமானது. எனவே இந்த நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு கோடைகால விடுமுறை நீதிமன்றத்தின் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக விரிவான பதிலளிக்க தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை வரும் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U