👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
மண் பானையில் தண்ணீர் அருந்துவது நமக்குப் புதிதல்ல. இருப்பினும் அவற்றையெல்லாம் மறந்து போன இன்றைய தலைமுறையினருக்கு அதன் நன்மைகள் குறித்து எடுத்துரைப்பது நம் கடமை.
மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் : மண் பானையில் நீர் அருந்துவதால் மெட்டபாலிசத்தை தூண்டி அதன் வளர்ச்சியை அதிகரிக்கும். அதில் இருக்கும் மினரல்கள் ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.
இயற்கையாகவே நீர் குளிர்சியாதல் : வெயில் நாட்களில் மண் பானை நீர் அருந்தும்போது தேன் போன்று சுவைக்கும் என்பார்கள். அது உண்மைதான். இயற்கையாகவே மண் பானைகளில் நீர் குளிர்ச்சியாக மாறும். அதுமட்டுமன்றி அந்த நீரின் சுவையும் எதிலும் கிடைக்காத தனித்துவமானது. இதற்குக் காரணம் மண் பானையில் உள்ள மண் நீரை உறிஞ்சி அதை வெளியேற்றும் இது இயற்கையாக நிகழக்கூடியது. அதேபோல் திறக்கும்போது உட்செல்லும் காற்று உள்ளேயே சூழ்ந்து கொண்டு நீரால் குளிர்சியாகிவிடும். அதனால்தான் நீர் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கிறது.
கோடைக்கால நோய்களைத் தடுக்கும் : கோடைக்காலத்தில் வெயில் காரணமாக சில நோய்கள் தொற்றிக்கொள்ளும். இதைத்தடுக்க மண் பானை நீர் தான் சிறந்த இயற்கை மருந்து. கனிமச் சத்துகள் நிறைந்த பானை நீர் உடலுக்கு பல நோய் எதிர்ப்பு சக்திகளை அளிப்பது மட்டுமன்றி தீராத தாகத்தையும் ஒரு கிளாஸ் நீரில் தீர்த்துவிடும்.
இயற்கையான கரத் தன்மை (Alkaline) கொண்டது : காரத் தன்மை என்பது உடலில் பி.எச் அளவை சீராக வைக்க உதவுவது. இது உடலுக்கு மிகவும் முக்கியமான நீரின் அளவை தக்க வைக்க உதவக் கூடியது. இது பானை நீரை அருந்தும் போது இயற்கையாகவே உடலுக்கு கிடைக்கிறது.
தொண்டைக்கு நல்லது : குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட குளிர்ந்த நீரை அருந்தும் போது சில பின்விளைவுகள் ஏற்படும். மண் பானை நீர் எந்த பக்கவிளைவுகளுமற்றது. குறிப்பாக சளி, இருமல், தொண்டை வறட்சி, ஆஸ்துமா, தொண்டை புண் போன்ற பிரச்னைகளுக்கு பானை நீர் சிறந்த தேர்வு.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U