சென்டாக் ஆன்லைன் கவுன்சிலிங் விண்ணப்பம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 08, 2019

சென்டாக் ஆன்லைன் கவுன்சிலிங் விண்ணப்பம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
மருத்துவம், பொறியியல், கலை- அறிவியல் உள்ளிட்ட அனைத்து பாட பிரிவுகளுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான உதவி மையங்களை அதிகரிக்க உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பித்து, கவுன்சிலிங் நடத்தப்பட்டு வந்தது. கலை, அறிவியல் உள்ளிட்ட பிற பாட பிரிவுகளுக்கு, மாணவர்கள் நேரடியாக கல்லுாரிக்கு சென்று விண்ணப்பிக்கும் முறை இருந்தது. கடந்த ஆண்டு முதல், மருத்துவம், பொறியியல், கலை- அறிவியல் உள்ளிட்ட அனைத்து பாட பிரிவுகளுக்கு விண்ணப்பித்தல் மற்றும் சேர்க்கைக்கு, ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சில குழப்பங்கள் இருந்தது. இதற்காக, அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இவை போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதை சரிசெய்யும் வகையில், இந்தாண்டுக்கான மருத்துவம், பொறியியல், கலை- அறிவியல் உள்ளிட்ட அனைத்து பாட பிரிவுகளுக்கும், ஆன்லைன் விண்ணப்பம் வழங்குவது 10 நாட்களில் துவக்கப்படும் என சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவியாக, புதுச்சேரி முழுவதும் உள்ள அரசு கலை - அறிவியல் கல்லுாரிகள் மற்றும் பல இடங்களில் உதவி மையங்கள் ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த உதவி மையங்கள் மூலம், மாணவர்கள் இலவசமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்காக கல்லுாரி முதல்வர்கள், சென்டாக் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தை, வரும் 30ம் தேதி நடத்த உயர்கல்வி துறை ஏற்பாடு செய்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews