👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
முதல் வகுப்பில் சேர்க்க குழந்தையின் வயது எவ்வளவு இருக்க வேண்டும்?
ஒரு குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க ஜீலை 31 ஆம் தேதியன்று 5 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் 5 வயது பூர்த்தியடைந்தால், வட்டாரக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பித்து வயது உரிய தளர்வாணை பெற்று, முதல் வகுப்பில் சேர்த்துக் கொள்ளலாம். முடிந்த வரை இந்த நிலையை தவிர்ப்பது நல்லது.
*ஆகஸ்ட் 31 முதல் டிசம்பர் 31 க்குள் 5 வயது நிரம்பிய குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்க முடியுமா?*
*தற்போதைய விதிகளின்படி ஆகஸ்ட் 31 முதல் டிசம்பர் 31 வரை 5 வயது நிரம்பும் குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்க இயலாது.* *அவ்வாறு சேர்க்கை நடந்திருந்தால், இந்த தவறுக்கு தலைமை ஆசிரியர் மட்டுமே முழு பொறுப்பு.* *இவ்வாறு சேர்க்கப் பட்ட குழந்தைக்கு எந்த அலுவலரும் தவிர்ப்பு வழங்க இயலாது.*
*மேலும், தவறுதலாக சேர்க்கப்பட்டதற்கு கல்வித் துறை எடுக்கும் நடவடிக்கைக்கு தலைமை ஆசிரியர் ஆளாக நேரிடும்.*
விஜய தசமி அன்று 5 வயது பூர்த்தியாகும் குழந்தைகளை, பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கலாமா?
ஜுலை 31 அன்று 5 வயது நிரம்பிய குழந்தைகளில், எவரேனும் சேர்க்கப்படாமல் விடுபட்டிருந்தாலோ அல்லது ஐதீகம் காரணமாக விஜயதசமி அன்று பள்ளியில் சேர்த்தால் நல்லது என பெற்றோர் விரும்பினாலோ, அந்த குழந்தைகளை விஜயதசமி அன்று பள்ளியில் சேர்க்கலாம். எப்படி பார்த்தாலும் ஜுலை 31 அன்று 5 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்பது தான் கணக்கு.
தற்போது, அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அவர்களை இந்த கல்வி ஆண்டிலேயே EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டுமா?
அடுத்த கல்வியாண்டு என்பது ஜுன் 1 ஆம் தேதி தான் தொடங்குகிறது என்பதால், அடுத்த கல்வியாண்டு தொடங்கிய பின், பள்ளிக்கல்வித் துறை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்கும். அதன் பின்னரே EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது நல்லது. அதன் முன்னரே பதிவேற்றம் செய்தால், அந்த மாணவனுக்கு முதல் வகுப்பில் பதிவு செய்ய இயலாது. மேலும் அம்மாணவன் கோடை விடுமுறையில், வேறு ஊருக்கு குடிபெயர்ந்தாலோ, வேறு பள்ளியில் சேர்ந்தாலோ, நம் பள்ளி EMIS பதிவிலிருந்து Student Pool க்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்படும். Student Pool ல், ஒரு மாணவன் நீண்ட நாட்கள் இருந்தால், அம் மாணவன் இடை நின்ற மாணவனாக கருதப்படுவான். இதற்கும் தலைமை ஆசிரியர் தான் பொறுப்பேற்க நேரிடும்.
*ஆசிரியர் பணியிடத்தை தக்கவைத்துக் கொள்ள, வயது குறைந்த குழந்தைகளை தவறான பிறந்த தேதி மூலம் EMIS இணைய தளத்தில் பதிவு செய்து, ஆசிரியர் பணியிட மாறுதல் முடிந்த பின், பள்ளிப் பதிவேட்டில் நீக்கம் செய்து, EMIS இணைய தளத்திலிருந்து Student Pool அனுப்பலாமா?*
ஆகவே தற்போது அனைத்துமே இணைய தளம் மற்றும் e-பதிவேடுகள் மூலமே பதிவேற்றம் நடைபெறுவதால், தலைமை ஆசிரியர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.
தகவல்கள்: திரு. லாரன்ஸ் அவர்கள், திருச்சி.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்