👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
54,451 பேரை வீட்டுக்கு அனுப்ப பிஎஸ்என்எல் நிர்வாகக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்கள் சில மூடப்பட்டு விட்டன. இதுபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தையும் மூடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அப்படி ஒரு திட்டம் எதுவும் இல்லை என பிஎஸ்என்எல் மறுப்பு தெரிவித்தது. நஷ்டம் காரணமாக சம்பளம் அளிக்க கூட தாமதம் ஆனது. வருவாயில் பெரும்பகுதி சம்பளத்துக்கே செல்வதுதான் இதற்கு காரணம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
இந்த சூழ்நிலையில், ஆட்குறைப்பு நடவடிக்கையாக பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் 54,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் பரிந்துரைக்கு பிஎஸ்என்எல் நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓய்வு வயதை 58ஆக குறைப்பது, 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு ஆகிய முடிவுகளுக்கு நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் 54,451 பேருக்கு வேலை இழப்பு ஏற்படும். சம்பள செலவும் குறையும். இது நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கையான 1,74,312 ல் 31 சதவீதம். தேர்தலுக்கு பிறகு இதற்கான செயல்பாடுகள் துவங்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்