👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த உயர்கல்வித் துறைகள் மற்றும் படிப்புகள் ஏராளமாக உள்ளன. அவற்றில் தனித்துவமானது ஆடியோலஜி மற்றும் ஸ்பீச் லாங்குவேஜ் பேத்தாலஜி (Audiology & Speech-Language Pathology-SLP) போன்ற ஹெல்த் சயின்ஸ் படிப்புகள். இந்தியாவில் 50.71 லட்சம் மக்கள் கேட்கும் திறன் குறைபாடு உடையவர்களாகவும், 19.98 லட்சம் மக்கள் பேச்சுக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளதாகக் கூறுகிறது ஒரு புள்ளிவிவரம்.
இதுபோன்ற குறைபாடு உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைத்து வயதினருக்கும் உள்ள பேச்சுத் திறன், கேட்கும் மற்றும் விழுங்கும் திறன் குறைபாடுகளைக் கண்டறிதல், கண்காணித்தல், குணப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு கவுன்சிலிங் வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கிய உடல்நலம் சார்ந்த அறிவியல் துறையே ஆடியோலஜி.
கேட்கும், பேசும் திறன் சார்ந்த குறைபாடுகளைப் பற்றிய அறிவியல் படிப்பே ஆடியோலஜி. இத்துறையில் தொழில்முறை பயிற்சி பெற்றவர்கள் ஆடியோலஜிஸ்ட் மற்றும் ஸ்பீச் லாங்குவேஜ் பேத்தாலஜிஸ்ட் அல்லது ஸ்பீச் தெரப்பிஸ்ட் என அழைக்கப்படுகின்றனர். பிசியோதெரபி, கிளினிக்கல் சைக்காலஜி, பிசிக்கல் தெரபி போன்ற உடல் ஆரோக்கியம் சார்ந்த துறையே ஆடியோலஜி மற்றும் ஸ்பீச் லாங்குவேஜ் பேத்தாலஜி.
ஒருவரின் கேட்கும் அல்லது பேச்சுத் திறன் சரியான நிலையில் உள்ளதா? என்று ஆய்வு செய்வது, அப்படி சரியான நிலையில் இல்லையென்றால், அவர்களுக்கு பேச்சு அல்லது கேட்கும் குறைபாடு உள்ளதை உறுதி செய்வது, மேலும் அக்குறைபாடு எந்த அளவில் உள்ளது, எந்த வகையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது போன்ற குறைபாடுகளைக் கண்டறிந்து விளக்கி சிகிச்சைக்கு உட்படுத்துவதே இவ்விரு துறைகளின் பணி.
வேலை வாய்ப்பு
பேச்சு மற்றும் கேட்கும் திறன் குறைபாடு உள்ள குழந்தைகள், பெரியவர்கள், ஆட்டிஸம் போன்ற சிறப்பு குழந்தைகளின் கல்விக்குப் பெரும் பங்காற்றுவது என தொழில்முறை பயிற்சி பெற்ற ஆடியோலஜிஸ்ட் மற்றும் ஸ்பீச் லாங்குவேஜ் பேத்தாலஜிஸ்ட்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளன. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஹியரிங் சயின்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் சயின்ஸ் மற்றும் அது தொடர்பான குறைபாடுகளைப் பற்றி கற்பிக்கும் கல்வியாளர்களாகவும், ஸ்பீச் மற்றும் ஹியரிங் கல்விநிறுவனங்கள், மருத்துவ மனைகள், சிறப்பு பள்ளிகள், காது கேட்க வைக்கும் கருவியின் உற்பத்தித் துறையில் என பல தளங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன. மேலும் இந்திய மறுவாழ்வு கவுன்சிலின் கட்டுப்பாட்டில் இயங்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் எம்பவர்மென்ட் ஆஃப் பெர்சன்ஸ் வித் டிஸபிலிட்டிஸ், கம்பொசிட் ரீஜினல் சென்டர்ஸ் ஃபார் பெர்சன்ஸ் வித் டிஸபிலிட்டிஸ் (CRCS), சி.பி.எஸ்.சி பள்ளிகள், மறுவாழ்வு மையங்கள் என அரசுத்துறைகளிலும் தனியார் துறைகளிலும் வேலைவாய்ப்பு பெருகியுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்
அரசு மற்றும் தனியார் கல்விநிறுவனங்கள் பல்வேறு வகையான ஆடியோலஜி மற்றும் ஸ்பீச் லாங்குவேஜ் பேத்தாலஜி சார்ந்த படிப்புகளை வழங்கி வருகின்றன. Diploma in Hearing Aid & Ear Mould Technology, Diploma in Early Childhood, Special Education (Hearing Impairment), Diploma in Hearing Language & Speech ஆகியவை ஒரு வருட கால அளவிலான டிப்ளோமா படிப்புகளாகும். நான்கு வருட கால அளவிலான இளங்கலைப் படிப்பான B.ASLP மற்றும் M.Sc (Speech Language Pathology), M.Sc, (Audiology) ஆகியவை இரண்டு வருட அளவிலான முதுகலைப் படிப்புகளாகும்.
PG Diploma in Augmentative and Alternative Communication, PG Diploma in Clinical Linguistics for Speech - Language Pathology, PG Diploma in Forensic Speech Science & Technology, PG Diploma in Neuro - Audiology ஆகியன ஒரு வருட கால அளவிலான முதுகலைப் படிப்புகளாகும். மேலும் Ph.D (SLP),(Aud),(Speech and Hearing) மூன்று வருட முனைவர் படிப்புகளும் வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதி
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இளங்கலை படிப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர். மேலும் விண்ணப்பதாரர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ்/கணிதம்/உயிரியல் போன்ற துறைகளை விருப்பப் பாடங்களாக தேர்வு செய்திருத்தல் வேண்டும்.
இந்திய மறுவாழ்வு கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் B.ASLP அல்லது B.Sc (Speech & Hearing) போன்ற இளங்கலை பட்டத்தில் 55% தேர்ச்சி பெற்றவர்கள் முதுகலைப் படிப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர். மேலும் டிப்ளோமா மாணவர்கள் புதுடில்லியில் இயங்கும் National Board of Examination in Rehabilitation (NBER) நடத்தும் தேசிய நுழைவுத்தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட
கல்வி நிறுவனங்கள்
இந்திய மறுவாழ்வு கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற சுமார் 58 அரசு மற்றும் தனியார் கல்விநிறுவனங்கள் இந்தியா முழுவதும் இயங்கி முழுநேரப் படிப்புகளை வழங்கி வருகிறது. முன்னணிக் கல்வி நிறுவனங்கள் சில:
* All India Institute of Speech and Hearing (AIISHw), Mysore
* Dr. Shakuntala Misra National Rehabilitation University (DSMNRU), Lucknow
* Ali Yavar Jung National Institute of Speech and Hearing Disabilities (Divyangjan) (AYJNISHED), Mumbai.
* National Institute of Speech & Hearing (NISH), Thiruvananthapuram,
* National Institute for Empowerment of Persons with Multiple Disablities (NIEPMD), Chennai
* Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research,(JIPMER), Pondichery
* Medical College (CMC), Vellore
* Sri Ramachandra Medical College and Research institute, Chennai.
-
வெங்கட் குருசாமி
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்