Breaking

Friday, February 08, 2019

தற்காலிக ஆசிரியர்கள் விடை திருத்த கட்டுப்பாடு: அண்ணா பல்கலை முடிவுக்கு எதிர்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648
தற்காலிக ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்த, அண்ணா பல்கலை விதித்த கட்டுப்பாடுகளுக்கு, எதிர்ப்பு எழுந்துள்ளது. 'இது குறித்து, கமிட்டி அமைத்து முடிவு செய்யப்படும்' என, துணைவேந்தர், சூரப்பா தெரிவித்து உள்ளார். அண்ணா பல்கலையில், நிரந்தர பணியில் உள்ள பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களுக்கு, மாதம், 60 ஆயிரம் ரூபாய் முதல், 2 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
உதவி பேராசிரியர்களுக்கு இணையாக, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும், 278 தற்காலிக ஆசிரியர்களுக்கு, மாதம், 25 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் வழங்கப்படுகிறது. எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தங்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, தற்காலிக ஆசிரியர்கள் கோரி வருகின்றனர். இதுகுறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. இந்நிலையில், அண்ணா பல்கலையின் தேர்வு துறை மறுமதிப்பீட்டில் நடந்த குளறுபடியில், சில தற்காலிக ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தியதும் தெரியவந்தது.
இது குறித்து, அண்ணா பல்கலை துணைவேந்தர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, தற்காலிக பேராசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துஉள்ளனர் .இதில், வினாத்தாள் தயாரிப்பு மற்றும் விடைத்தாள் திருத்தப் பணியில், தற்காலிக ஆசிரியர்களை அனுமதிக்கக் கூடாது என்பது, முக்கிய அம்சம். இதற்கு, தற்காலிக ஆசிரியர்கள் இடையே, கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. பேராசிரியர்களுக்கு இணையான வேலை பளுவை சுமக்க வைத்து, தேர்வு பணிகளில் இருந்து விடுவிப்பது, பாரபட்சமானது என, அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதையடுத்து, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தற்காலிக ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்தனர். பிப்., 5ல், பாட வேளை தவிர, மற்ற நேரங்களில், துணைவேந்தர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்களின் போராட்டத்திற்கு, மாணவர்கள் தரப்பிலும் ஆதரவு குவிந்துள்ளது. எனவே, நிலைமையை சமாளிக்கும் வகையில், துணைவேந்தர், சூரப்பா, தற்காலிக ஆசிரியர்களை அழைத்து, அவர்களின் கோரிக்கை மனுவை பெற்றுள்ளார்.
கோரிக்கைகள் என்ன? மனுவில் கூறியிருப்பதாவது:தற்காலிக ஆசிரியர்கள் என்பதற்கு பதில், ஒப்பந்த அடிப் படையிலான உதவி பேராசிரியர்கள் என, பதவியை மாற்ற வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மீண்டும், தேர்வு பணிகளை வழங்க வேண்டும். ஆராய்ச்சி மாணவர்களுக்கு, 'கைடு' ஆக பணியாற்ற அனுமதிப்பதோடு, சம்பளத்தை, யு.ஜி.சி., விதிகளின்படி, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள், மனுவில் இடம் பெற்று உள்ளன.இது குறித்து, 'நிபுணர் குழு அமைத்து, உரிய முடிவுகள் எடுக்கப்படும்' என, துணைவேந்தர், சூரப்பா தெரிவித்ததாக, தற்காலிக பேராசிரியர் குழுவை சேர்ந்த, உதவி பேராசிரியர், சண்முக பெருமாள் கூறியுள்ளார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog