👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள், இந்தியாவுக்கு படிக்க வருவதை ஊக்குவிக்கும் நோக்கில், முதல் கட்டமாக, 20கல்லூரிகளில், அதிநவீன விடுதிகள் கட்ட, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
நம் நாட்டில் படிக்கும், வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை, மிகவும் குறைவாக உள்ளது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது பற்றி, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது
இந்தியாவில் படிக்க, வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், அதிகளவில் வராததற்கு, இங்கு விடுதி வசதிகள் சரியாக இல்லாதது தான், முக்கிய காரணம்.'சிறந்த விடுதி, சர்வதேச உணவு, உடற் பயிற்சி கூடம் ஆகியவை இருக்க வேண்டும்' என, வெளிநாட்டு மாணவர்கள் விரும்புகின்றனர். இவை அனைத்தும், நம் நாட்டில், எந்த கல்லுாரியிலும், ஒரே வளாகத்தில் இல்லை
இந்த பிரச்னைக்கு தீர்வு காண, முதல் கட்டமாக, 20 முன்னணி கல்வி நிறுவனங்களில், 'சர்வதேச மாணவர் மையம்' அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தில், 100 அறைகள், நவீன வசதிகளுடன் கட்டப்படும். அத்துடன், உடற்பயிற்சிக் கூடம் உட்பட, அனைத்து வசதிகளும் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்