சிவில் சர்வீசஸ் தேர்வுகள் எழுத உதவியாளர்கள்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 28, 2018

Comments:0

சிவில் சர்வீசஸ் தேர்வுகள் எழுத உதவியாளர்கள்?


சிவில் சர்வீசஸ் தேர்வுகள் எழுதுவதற்கு உதவியாளர் அனுமதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில் மாற்று திறனாளிகளுக்கு சட்டரீதியாக அளிக்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில் இவ்வழக்கானது பரிசிலீக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில், கோகுல் காளீஸ்வரன் என்பவர் தனக்கு ரைட்டர்ஸ் கிராம்ப் எனப்படும் நரம்பியல் நோய் ( எழுத்தாளர்களுக்கு வரும் நோய். இந்த நோயினால் அவர்களின் மணிக்கட்டும் விரல்களும் பாதிக்கப்பட்டு விரல்கள் மடங்கிக் கொள்ளும். அவர்களால் எழுத முடியாது) வந்துள்ளதாகவும் அதனால் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத உதவியாளர் ஒருவரை அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இவ்வழக்கை பரிசிலீத்த உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் மனுதாரர் . நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக சிவில் சர்வீசஸ் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்கை தொடர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு அவர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திரு்பபதாக அறிகிறோம். ஆனால் அந்த வழக்கு கடந்த ஒரு ஆண்டாக நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வழக்கை உயர் நீதிமன்றத்தி்ல் தொடர்ந்துள்ளார். எனவே அவர் வழக்கில் நிவாரணம் பெறத் தடையில்லை. மாற்று திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம்2016 ன்படி மனுதாரரின் கோரிக்கையானது பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews