பள்ளி மாணவர்களுடன் பாஸ்போர்ட் மற்றும் அஞ்சல் துறை கலந்தாய்வு
தேவகோட்டை – பாஸ்போர்ட் மற்றும் அஞ்சல் துறையின் செயல்பாடுகள், பயன்பாடுகள் குறித்து பள்ளி மாணவர்களுடன் கந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
தேவகோட்டை தலைமை அஞ்சலகத்திற்கு சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் களபயணம் சென்றனர்.தலைமை அஞ்சலக அதிகாரி மலைமேகம் வரவேற்றார். பாஸ்போர்ட் அலுவலகத்தின் செயல்பாடுகளை பாஸ்போர்ட் அலுவலர் மணிவேலும் ,அஞ்சலக துறையின் செயல்பாடுகள் ,பயன்பாடுகள் குறித்து அஞ்சலக தலைமை அதிகாரி மலைமேகம், அலுவலர்கள் கார்த்திக்,வெங்கடேசன் ஆகியோர் செயல் முறை விளக்கம் அளித்தனர்.ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.மாணவர்கள் கோட்டையன் ,காயத்ரி, அய்யப்பன் ,அஜய்,சந்தியா,மாதரசி,சிரேகா உட்பட பலர் சந்தேகங்களை கேட்டு பதில் பெற்றனர்.
மாணவர்களுக்கு தேவகோட்டை தலைமை அஞ்சலக அதிகாரி மலைமேகம் அஞ்சலக மற்றும் பாஸ்போர்ட் அலுவலக நடைமுறைகள் குறித்து விளக்கினார்.
மாணவர்கள் எளிதில் பாஸ்போர்ட் பெறலாம்!
``பள்ளி மாணவர்கள் பாஸ்போர்ட் பெற, என்ன செய்ய வேண்டும்?’’ என்ற கேள்வியோடு பாஸ்போர்ட் அதிகாரியை மாணவர்கள் சந்தித்தார்கள்.
பாஸ்போர்ட் தேவைப்படுபவர்கள் முதலில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.பிறகு விண்ணப்பித்த கடிதத்தோடு , ஒரிஜினல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். இவ்வாறு கொண்டு வரும்போது சான்றிதழின் நகலையும், அந்த நகலில் சான்றிதழ் உண்மைத்தன்மை கொண்டது என்ற சுய சான்றொப்பம் இட்டு வழங்க வேண்டும்.நாங்கள் இங்கே அதனை சரிபார்த்து உங்கள் விவரங்களை மேல் அலுவலகத்துக்கு அனுப்புவோம்.அங்கு இருந்து போலீஸ் விசாரணைக்கு அனுப்புவார்கள்.அதன் பிறகு பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து உங்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்கும்.
``தற்போது பொதுமக்கள் எளிதில் பாஸ்போர்ட் பெறும்வகையில் விதிகளை எளிமையாக்கியுள்ளோம். குறிப்பாக, பள்ளி மாணவர்கள் பாஸ்போர்ட் பெறுவது எளிது. காவல்துறை விசாரணைக்குப் பிறகே பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை ஆகலாம்.
பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும்போது, முகவரிக்கான சான்றிதழும் பெயர் மற்றும் பிறந்த தேதிக்கான சான்றிதழும் இருக்க வேண்டும். முகவரி விவரத்தைச் சரிபார்க்க ஆதார் கார்டே போதுமானது. Kaninikkalvi
பாஸ்போர்ட் மட்டுமே வெளிநாடு செல்ல போதாது.விசா அவசியம் தேவைப்படும்.அதனையும் பெற்று கொண்டுதான் வெளிநாடு செல்ல இயலும்.இவ்வாறு மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.