இணையதள குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், புதிய விதிமுறைகள் வகுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இணையதள குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில், சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல் கணக்குகள் தொடங்குவதற்கு ஆதாரை கட்டாயமாக்கக் கோரி, ஆண்டனி கிளமெண்ட் ரூபன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தவறான தகவல்களை தடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும், இணையதள குற்றங்களை தடுக்கும் வகையில் புதிய விதிகளை உருவாக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் கிளை அலுவலகத்தை இந்தியாவில் அமைக்க கோரிய வழக்கில், வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள், செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.