💥💥💥💥💥💥💥💥💥💥💥
1.5 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நீதிபதிகள் ஆசிரியரின் சம்பளத்தைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. உங்கள் நீதித்துறையில் உள்ள 100 கோடி கணக்கு மாஸ்டர் குமரேசன் போன்ற வெட்கப்பட வேண்டியவை பற்றி முதலில் விமர்சனம் செய்யுங்கள் . குன்கா போன்ற நீதியரசர்களை வணங்குகிறோம். சம்பளத்துடன் கிம்பளம் வாங்கும் பழக்கமும் இல்லை . அதற்கான வாய்ப்பும் இல்லை. மாணவர் நலன் முக்கியமில்லை என்று நா கூசாமல் பேசுபவர்களுக்கு கூறிக்கொள்கிறேன். சனி ஞாயிறுகளில் விடுமுறை நாட்களிலும் பாடம் நடத்த தயார் என்று உறுதி கூறித்தான் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளோம். உயர்நிலை மாணவர்களுக்கு இன்றும் மாலை வகுப்பு விடுமுறை வகுப்பு நடைபெறத்தான் செய்கிறது. நீட் தேர்வில் 5 அரசுபள்ளி மாணவர்கள் தேர்ச்சி. ஆம் எம்மாணவர்கள் லட்சக்கணக்கில் பணம் கட்டி கோச்சிங் போகவில்லை. போக வாய்ப்பும் இல்லை. மாநில பாடத்திட்டத்தில் நீட் வினாக்களை அமைத்து தர சொல்லுங்கள். ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் அரசு பள்ளி ஏழைகளின் ஒரே புகலிடம். தனியார்பள்ளி வசதி படைத்தோரின் புகலிடம். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மனப்பாடம் செய்ய வைக்கும் வேலை ஒன்றுதான். அரசு பள்ளி ஆசிரியருக்கு தேர்தல் பணி cencus நலத்திட்டம். விளையாட்டுப் போட்டிகள் பள்ளித்தூய்மை பராமரிப்பு கழிவறை தூய்மை பராமரிப்பு அரசின் கற்பித்தல் முறை பினபற்றல். இன்னும் பல. தனியார் பள்ளிகளைப் போல் 480 மதிப்பெண் க்கு மேல் எடுக்கும் மாணவர்கள் மட்டும் இங்கே படிக்கவில்லை 98% படிப்பில் பின்தங்கிய ஏழை மாணவர்கள். அரசு பள்ளியில் பயின்று 480 மதிப்பெண் எடுப்பவர்களைதான் காலில் விழுந்து தூக்கிக் கொண்டு போகிறார்களே தனியார் ரவுடிகள். அரசு பள்ளி &ஆசிரியர்கள் தனியார் பள்ளி &ஆசிரியர்கள் என்று ஒப்பிட்டு பேசுவதே தவறு . நீதிமன்றம் அரசைப் பார்த்து இந்த விமர்சனத்தை வைக்க வேண்டும் . அதே தனியார் பள்ளி ஆசிரியர் என்னுடன் அனைத்து பிரிவிலும் போட்டி போட தயாரா? போராட்டத்தை ஒடுக்க எங்கள் பணியை இழிவாக விமர்சிக்க வேண்டாம் please. யாரையும் குற்றம் சொல்ல வெட்கமாக உள்ளது. இப்படி நம்மை விமர்சிப்பதை பார்த்து படித்து சிரித்து விட்டுப் போகும் சக ஆசிரியர்களையும், முக்கியமாக எதையுமே கண்டுக்காத சங்கங்களையும் நான் ஏமாற்றத்துடனே பார்க்கிறேன்.
இவண்
மனசாட்சியுடன் பணியாற்றும் ஆசிரியர்களில் ஒருவன்
மயிலே மயிலே என்றால் இறகு போடாது.அரசு தான் போராட்டத்தை ஒடுக்க வேண்டும்!
அரசியல்வாதிகள் கோடி கணக்கில் கொள்ளை அடிப்பார்கள் அதை கேட்க நாக்கில்லை
மக்கள் பணியை கவனிக்காமல் கூவத்தூர் ரிசார்டில் கூத்தடித்த மக்கள் ஊழியர்களான சட்டமன்ற உறுப்பினர்களை கேட்க துப்பில்லை
கண்ணுக்கு தெரிந்தே ஆளும் கட்சியினர் செய்யும் குதிரை பேரங்களையும் ஆர்.கே நகரில் செய்த பணப்பட்டுவாடா அநியாயங்களை கண்டுக்கொள்ள வக்கில்லை
தமிழ்நாட்டில் உள்ள எல்லா மலைகளையும் அரித்து இயற்கையை கொள்ளையடித்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் அரசியல் புள்ளிகளுக்கெதிராக பேச வாயில்லை
அரசியல்வாதிகள் தரும் அழுத்தத்தால் தற்கொலை செய்துக் கொள்ளும் நேர்மையான அதிகாரிகளுக்கு உரிய தீர்ப்பையும் அந்த அரசியல்வாதிகளுக்கு தண்டனையும் வழங்க தைரியமில்லை
குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய பாலில் தண்ணீரை கலந்து அயோக்கியத்தனத்தை செய்த அரசியில் புள்ளிகளுக்கு இதுவரை தண்டனை வழங்க துப்பில்லை
ஆனால் நியாயமான கோரிக்கைகளை வாழ்வாதார் கோரிக்கைகளை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற தெம்பில்லாத ,ஒன்றுக்கும் உதவாத அரசுக்கு ஒத்தூதும் நீதிபதி அரசு ஊழியரா இல்லையா?

The judges are handpicked of government. The don't understand about school education system. The judges are also crooked mind people. Because they are all henpeked. The can not speak from their mind. They are all government kaipavaical. So we can not expect right direction from them . they are encouraging globalisation and privitation and against sudeshi
ReplyDelete