‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க 10 நாள் கால அவகாசம்: டிஆர்பி-க்கு ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள் 10-Day Extension to Apply for TET Exam: Teachers' Association Appeals to TRB
பணிச்சான்றிதழ் பெறுவதில் தொடர் தாமதம் ஏற்பட்டுள்ளதால் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு 10 நாள் காலஅவகாசம் வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக நடத்தப்பட உள்ள சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஏப்ரல் 10-ம் தேதி முடிவடைந்துவிட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையான முக்கிய ஆவணம் பணிச்சான்று ஆகும். மாவட்ட கல்வி அலுவலர்கள் பிப்ரவரி மாதம் முதல் அரசு பொதுத்தேர்வு பணியில் இருந்ததாலும் தேர்தல் பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் பணிச்சான்றிதழ் பெறுவதில் தொடர் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எனவே இதைக் கருத்தில் கொண்டு டெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு 10 நாள் கால நீட்டிப்பு வழக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
ஜூலை முதல் வாரத்தில் தேர்வு டெட் தேர்வு ஜூலை முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள்-1 ஜூலை 4-ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 ஜூலை 4-ம் தேதியும் நடைபெற உள்ளன. இத்தேர்வை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.