Breaking

Thursday, April 16, 2026

பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு நிறைவு: கோடை விடுமுறை நாளை தொடங்குகிறது



பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு நிறைவு: கோடை விடுமுறை நாளை தொடங்குகிறது Annual examinations for school students conclude today; summer vacation begins tomorrow.

பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு இன்றுடன் நிறைவு: கோடை விடுமுறை நாளை தொடங்குகிறது

பள்ளி முழு ஆண்​டுத் தேர்​வு​கள் இன்​றுடன் (ஏப்​.16) நிறைவு பெறுவதை அடுத்​து, மாணவர்​களுக்​கான கோடை விடு​முறை நாளை (ஏப்​.17) முதல் தொடங்​கு​கிறது.

தமிழக பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தில் 10, 11, 12-ம் வகுப்​புக்​கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2 முதல் ஏப்​ரல் 6-ம் தேதி வரை நடத்​தப்​பட்​டது. அதே​போல் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்​கான முழு ஆண்டு தேர்​வு​கள் ஏப்​ரல் 1-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. இந்த​ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஏப்​ரல் 23-ம் தேதி நடை​பெறவுள்​ள​தால், வழக்​கத்​தை​விட முன்​கூட்​டியே தேர்​வு​கள் நடத்​தப்​பட்​டன.

அதன்​படி 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்​களுக்கு நடை​பெற்று வந்த முழு ஆண்​டுத் தேர்​வு​கள் இன்​றுடன் (ஏப்​ரல் 16) நிறைவு​பெறுகின்​றன. நிறைவு நாளில் சமூக அறி​வியல் உள்​ளிட்ட பாடத் தேர்​வு​கள் நடத்​தப்பட உள்​ளன.

ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு: தொடர்ந்து இவர்​களுக்​கான கோடை விடு​முறை நாளை (ஏப்​ரல் 17) முதல் தொடங்​கு​கிறது.

எனினும், ஆசிரியர்​கள் பள்ளி இறுதி வேலை​நாளான ஏப்​ரல் 25-ம் தேதி வரை பணிக்கு வந்து விடைத்​தாள் மதிப்​பீடு மற்​றும் மாணவர் சேர்க்கை போன்ற நிர்​வாகப் பணி​களை கவனிக்க வேண்​டும். கோடை விடு​முறை முடிந்து மீண்​டும் பள்​ளி​கள் ஜூன் 1-ம் தேதி திறக்​கப்​படும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog