Breaking

Tuesday, July 07, 2026

அரசு பாலிடெக்னிக்கில் ஜூலை 31-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை



அரசு பாலிடெக்னிக்கில் ஜூலை 31-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை Student admissions at the Government Polytechnic open until July 31.

அரசு பாலிடெக்​னிக் கல்​லூரி​களில் ஜூலை 31-ம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடை​பெறும் என தொழில்​நுட்​பக் கல்வி இயக்​ககம் அறி​வித்​துள்​ளது.

அனைத்து அரசு பாலிடெக்​னிக் கல்​லூரி​களில் நடப்பு கல்வி ஆண்டில் (2026-27) முதலாம் ஆண்டு மற்​றும் நேரடி 2-ம் ஆண்டு (லேட்​ரல் என்ட்​ரி) மற்​றும் பகு​தி நேர டிப்​ளமா படிப்​புக்​கான நேரடி மாணவர் சேர்க்​கை ஜூலை 31 வரை நடை​பெறும் என தொழில்நுட்​பக் கல்வி இயக்​குநர் பி.ரத்​தின​சாமி தெரிவித்துள்ளார்.

நேரடி சேர்க்கை அறிவிக்​கப்​பட்​டிருப்​ப​தால் தகு​தி​யுடைய மாணவர்​கள் சம்​பந்​தப்​பட்ட அரசு பாலிடெக்​னிக் கல்​லூரிக்கு தேவை​யான கல்​விச் சான்​றிதழ்​களு​டன் சென்று உடனடி சேர்க்கை பெறலாம். இதற்​கென தனி​யாக விண்​ணப்​பிக்க வேண்டிய அவசி​யமில்​லை.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog