ஜாக்டோ ஜியோ சார்பில் டிச.9ல் சாலை மறியல்
சிவகங்கையில் டிச.9ல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
சிவகங்கையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகேஸ்வரன், நாகராஜன், ராம்குமார் தலைமை வகித்தனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர், குமார் மாநில முடிவுகளை தெரிவித்தனர்.
கூட்டத்தில் தமிழகத்தில் 2003 ஏப்.,க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் வழங்க வேண்டும். முடக்கி வைத்துள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு உடனே வழங்க வேண்டும். இடைநிலை, உயர், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்.
அரசு ஊழியர், ஆசிரியர்களிடையே ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். கல்லுாரி பேராசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள பணி மேம்பாட்டு, ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். உயர், மேல்நிலை பள்ளி இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்த்த வேண்டும்.
சிறப்பு கால முறை சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச., 9ல் சிவகங்கை அரண்மனை வாசல் முன் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்.
டிச., 1 முதல் அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் பிரசார கூட்டங்களை நடத்துவது என தீர்மானித்தனர

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.