புதிய வருமான வரி மசோதா ஒரு வாரத்தில் அறிமுகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 03, 2025

Comments:0

புதிய வருமான வரி மசோதா ஒரு வாரத்தில் அறிமுகம்

1349291


புதிய வருமான வரி மசோதா ஒரு வாரத்தில் அறிமுகம் - New income tax bill to be introduced in a week

வரு​மான வரி விகிதங்கள் தொடர்பாக அடுத்த வாரம் நாடாளு​மன்​றத்​தில் புதிய மசோதா அறிமுகம் செய்​யப்​படும் என்று மத்திய நிதி​யமைச்சர் நிர்மலா சீதா​ராமன் தெரி​வித்​துள்ளார்.

இதுகுறித்து நிதித்​துறை நிபுணர்கள் கூறிய​தாவது: புதிய வருமான வரி விகிதத்​தில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிக்​கப்​பட்டு உள்ளது. முழு​மையான விரி விகிதங்கள் தொடர்பாக புதிய மசோதா ஒரு வாரத்​தில் அறிமுகம் செய்​யப்​படும் என்று பட்ஜெட் உரையின்​போது அமைச்சர் நிர்மலா சீதா​ராமன் அறிவித்​துள்ளார். இந்த மசோதா குறித்து கடந்த பட்ஜெட்​டின்​போதே அமைச்சர் சுட்​டிக் காட்​டி​னார்.

கடந்த ஓராண்​டில் விரிவான மசோதா வரையறுக்​கப்​பட்டு உள்ளது. இந்த புதிய மசோதா​வில் பல்வேறு அம்சங்கள் இடம்​பெறக்​கூடும். அதாவது யாரெல்​லாம் வருமான வரி செலுத்த வேண்​டும். அவர்​களுக்கான வரி விகிதங்கள் என்னென்ன என்பன குறித்து தெளிவாக குறிப்​பிடப்​படலாம் வருமான வரி கணக்கு தாக்கலை எவ்வாறு மேற்​கொள்ள வேண்​டும். எவ்வாறு வருமான வரி செலுத்த வேண்​டும் என்பன உள்ளிட்ட அடிப்படை விவரங்​களும் புதிய மசோதா​வில் இடம்​பெறும். இவ்​வாறு நி​தித் துறை நிபுணர்​கள் தெரி​வித்​துள்ளனர்​. வருமானவரி தாக்கல் காலம் நீட்டிப்பு: வருமானவரி தாக்கல் செய்வதற்கான கால வரம்பு 2 ஆண்டுகளாக இருந்தது. இது 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்விக் கடன்களுக்கான பணத்தை செலுத்தினால் அதற்கு வரிப்பிடித்தம் (டிசிஎஸ்) செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். நேரடி வரி பிரச்சினைகளை தீர்க்க, வரி செலுத்துவோர் 33,000 பேர் விவாத் சே விஸ்வாஸ் 2.0 திட்டத்தை பயன்படுத்தியுள்ளனர். மூத்த குடிமக்களுக்கான வட்டி வருவாய்க்கான வரிபிடித்த வரம்பு இரட்டிப்பாக்கப்பட்டு ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கு....:

மூத்த குடிமக்​களுக்கான வட்டி வருமானத்​துக்கான டிடிஎஸ் வரம்பு ரூ.50,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்​கப்​பட்​டுள்​ளது. வயதான நிலை​யில் வாழ்​வா​தா​ரத்​துக்கு வருமானம் இன்றி வட்டியை மட்டுமே நம்பி​யிருக்​கும் லட்சக்​கணக்கான மூத்த குடிமக்​களுக்கு மிகவும் பயனளிப்​பதாக இந்த உச்ச வரம்பு இரட்​டிப்பு அறிவிப்பு அமைந்​துள்ளது.

மேலும், வீட்டு வாடகைக்கான டிடிஎஸ் வரம்​பும் ரூ.2.4 லட்சத்​தில் இருந்து ரூ.6 லட்சமாக பட்ஜெட்​டில் உயர்த்​தப்​பட்​டுள்​ளது. டிடிஎஸ் பிடித்தம் விகிதங்கள் மற்றும் வரம்​பு​களின் எண்ணிக்கையை குறைப்​பதன் மூலம் அதில் சீரமைப்பு செய்​யப்பட உள்ளதாக நி​தி​யமைச்​சர் தெரி​வித்​தார்​.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84618802