Advance IT Recovery Intimation Instruction - IFHRMS) களஞ்சியம் 2.0 மூலமாக வரும் நிதியாண்டிற்கான வருமான வரி பிடித்தம் தவணை தொகை மார்ச் 01 முதல் 10-ஆம் தேதிக்குள் நிர்ணயம் செய்ய கோருதல் தகவல் தெரிவித்தல் தொடர்பு.
கருவூல அலகு இராமநாதபுரம் மாவட்டக் அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலக பணியாளர்களுக்கும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் (IFHRMS) களஞ்சியம் 2.0 மூலமாக வரும் நிதியாண்டிற்கான வருமான வரி பிடித்தம் தவணை தொகை மார்ச் 01 முதல் 10-ஆம் தேதிக்குள் நிர்ணயம் செய்ய கோருதல் தகவல் தெரிவித்தல் தொடர்பு.
பார்வை:
ஆணையர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, சென்னை அவர்களின் காணொளி கூட்டம், நாள் 23.02.2024.
மேற்காணும் பொருள் தொடர்பாக இராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலக பணியாளர்களுக்கும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் (IFHRMS) களஞ்சியம் 2.0 மூலமாக வரும் நிதியாண்டிற்கான (2024-2025) வருமான வரி பிடித்தம் தானாகவே கணக்கீடு செய்யப்பட்டு 12 மாதங்களுக்கும் முன் தவணை தொகை (Advanced Income Tax Recovery) பிடித்தம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது என பார்வையில் காணும் ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குத்துறை, சென்னை அவர்களின் காணொளி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து பணியாளர்களும் மார்ச் 01-ஆம் தேதி முதல் மார்ச் 10-ஆம் தேதிக்குள் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் (IFHRMS) களஞ்சியம் 2.0 வலைதளத்தில் தங்களது பணியாளர் சுய சேவை (Employee Self Service icon) மூலமாக தங்களுக்கான வருமான வரி பிடித்தம் புதிய முறையில் அல்லது பழைய முறையில் பிடித்தம் செய்யப்பட வேண்டுமா என்பதற்கான பதிவுகளை பதிவு செய்ய வேண்டும் எனவும் தவறும்பட்சத்தில் வருமான வரி பிடித்தம் புதிய முறையில் தானாகவே தொடர்புடைய மென்பொருள் வாயிலாக கணக்கீடு செய்யப்பட்டு மாதவாரியாக பிடித்தம் செய்யப்படும் என்ற விபரத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், வரும் நிதியாண்டு (2024-2025) இறுதி வருமான வரி கணக்கீட்டிற்கு
டிசம்பர் 01 ஆம் தேதி முதல் டிசம்பர் 10 ஆம் தேதிவரை தேவைப்படும் மாற்றங்கள்
செய்து கொள்ளாலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Search This Blog
Friday, March 01, 2024
Comments:0
Home
IFHRMS
Advance IT Recovery Intimation Instruction - IFHRMS) களஞ்சியம் 2.0 மூலமாக வரும் நிதியாண்டிற்கான வருமான வரி பிடித்தம் தவணை தொகை மார்ச் 01 முதல் 10-ஆம் தேதிக்குள் நிர்ணயம் செய்ய கோருதல் தகவல் தெரிவித்தல் தொடர்பு.
Advance IT Recovery Intimation Instruction - IFHRMS) களஞ்சியம் 2.0 மூலமாக வரும் நிதியாண்டிற்கான வருமான வரி பிடித்தம் தவணை தொகை மார்ச் 01 முதல் 10-ஆம் தேதிக்குள் நிர்ணயம் செய்ய கோருதல் தகவல் தெரிவித்தல் தொடர்பு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.