மே மாதம் இறுதி செமஸ்டர்; அண்ணா பல்கலை அறிவிப்பு Final semester in May; Anna University Notification
சென்னை : 'இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு, நடப்பு கல்வி ஆண்டின் இறுதி செமஸ்டர் தேர்வு, மே மாதம் துவங்கும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு, டிசம்பரில் தேர்வுகள் முடிந்து, விடுமுறை விடப்பட்டது. நேற்று கல்லுாரிகள் மீண்டும் திறக்கப்பட்டு, அடுத்த செமஸ்டருக்கான பாடங்கள் துவங்கியுள்ளன.
இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு, மே மாதம் நடத்தப்பட உள்ளது. இதன்படி, சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி உள்ளிட்ட நான்கு கல்லுாரிகளில் வகுப்புகள், மே, 15ல் முடியும்.
பின், மே, 22 முதல் இறுதி செமஸ்டர் தேர்வுகள் துவங்கும். தேர்வுக்கு பின், கோடை விடுமுறை அளிக்கப்படும். ஜூன், 21ல் கல்லுாரிகள் மீண்டும் திறக்கப்படும். முதலாம் ஆண்டு தவிர, மற்ற மாணவர்களுக்கு இந்த அட்டவணைப்படி தேர்வு நடத்தப்படும்.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும், வேறு அட்டவணை வெளியிடப்படும். தேர்வு அட்டவணைக்கு ஏற்ப, மாணவர்கள் தங்கள் படிப்புக்களை திட்டமிட வேண்டும் என, அண்ணா பல்கலைதெரிவித்துள்ளது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.