இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் - எம்.டி. (சித்தா) பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கை 2022-2023ஆம் கல்வியாண்டு மாணவர்கள் சேர்க்கை அறிவிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 16, 2022

Comments:0

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் - எம்.டி. (சித்தா) பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கை 2022-2023ஆம் கல்வியாண்டு மாணவர்கள் சேர்க்கை அறிவிக்கை

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம்.

எம்.டி. (சித்தா) பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கை 2022-2023ஆம் கல்வியாண்டு

அறிவிக்கை

தமிழ்நாட்டில் அமைந்துள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி பாளையங்கோட்டை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான AIAPGET 2022- (Siddha)ல் தகுதி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவங்களை www.tnhealth.tn.gov.in என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேட்டினை, www.tnhealth.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப்படிவங்கள் இயக்குநரக அலுவலகத்திலோ அல்லது தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது வேறு எந்த இடங்களிலோ வழங்கப்படமாட்டாது. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள தகவல் தொகுப்பேட்டில் அறியலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், கோரப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநரகம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு 25.11.2022 மாலை 5.30 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews