ஆசிரியர் காலிப்பணியிட விவரம் விடுதலின்றி அளிக்க உத்தரவு Order issued to provide teacher vacancy details without delay. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 31, 2026

Comments:0

ஆசிரியர் காலிப்பணியிட விவரம் விடுதலின்றி அளிக்க உத்தரவு Order issued to provide teacher vacancy details without delay.



ஆசிரியர் காலிப்பணியிட விவரம் விடுதலின்றி அளிக்க உத்தரவு Order issued to provide teacher vacancy details without delay.

அரசு மேல்நிலைப் பள் ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணி யிட விவரங்களை விடுதல் இன்றி சமர்ப்பிக்க உத்தர விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி களில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் உட் பட், 14 பாடங்களில் 1996 முதுகலை ஆசிரியர் பணி யிடங்கள் காலியாக இருந் தன. அதற்கு தகுதியானவர் களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக, தேர்வு நடத்தப்பட்டது.

இப்பாடங்களில் முது நிலை பட்டம் பெற்ற 2,36,530 பேர் இதற்கான தேர்வு எழுதினர். கடந் தாண்டு ஜூலை மாதம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அக். 12ம் தேதி தேர்வு நடந்தது. கடந்த நவ. மாதம்

தேர்ச்சி பட்டியல் வெளி யிடப்பட்டது. அதனை தொடர்ந்து, தேர்வு பெற் றவர்களில் நான்கு பணி யிடங்களுக்கு ஐந்து பேர் என்ற அடிப்படையில் சான்றிதழ் சரி பார்ப்புக்கு கடந்த டிச. மாதம் அழைக் கப்பட்டனர். இதில் தேர்வு செய்யப் பட்டோர் தங்களுக்கு கலந் தாய்வுக்கான அழைப்பை எதிர் நோக்கியுள்ளனர். இதற்கிடையில், பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் அலுவலகத்திலி ருந்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில், பள்ளிக் கல் வித்துறையின் கீழ் செயல் படும் அனைத்து அரசு மற் றும் நகராட்சி பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரி யர் காலிப்பணியிட விவ ரங்கள் எந்த விடுதலும் இன்றி, இன்றி, 'எமிஸ்' இணைய தளத்தில் பதிவேற்றப் பட வேண்டும். இப்பணி நாளைக்குள் (31ம் தேதி) முழுமையாக ழுமையாக முடிக்கப் பட வேண்டும். காலிப்ப ணியிடம் ஏதேனும் விடு பட்டால், உரிய முதன்மை கல்வி அலுவலரே பொறுப் பேற்க வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்புக்குப் பின், பல் வேறு காரணங்களால் சில பணியிடங்கள் காலியாகி உள்ளன. அதனடிப்படை யில் கூடுதல் பணியிடங் களுக்கு வாய்ப்பு உள்ளது.

எனவே, தேர்ச்சி பெற் றோருக்கு பணி நியமனம் வழங்கும் வகையில், காலிப்பணியிட விவரங் களை பெற்று, கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட் டுள்ளதால், இந்த விவரங் கள் கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews