சேலம் மாவட்டத்தில் 19.01.2026 அன்று திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் ஓவியப் போட்டி - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு - முதற்பரிசு ரூ.5000/இரண்டாம் பரிசு ரூ.3000/மூன்றாம் பரிசு ரூ.2000/ - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 15, 2026

Comments:0

சேலம் மாவட்டத்தில் 19.01.2026 அன்று திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் ஓவியப் போட்டி - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு - முதற்பரிசு ரூ.5000/இரண்டாம் பரிசு ரூ.3000/மூன்றாம் பரிசு ரூ.2000/

சேலம் மாவட்டத்தில் 19.01.2026 அன்று திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் ஓவியப் போட்டி

குறள் வார விழாவினை முன்னிட்டு 19.01.2026 அன்று சேலம்,

கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் |பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் குறள் ஒப்பித்தல் போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடைபெறவுள்ளது

மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

தமிவழ் ளர்ச்சித்துறையின்சார்பில், குறள் வார விழாவினை முன்னிட்டு 19.01.2026 - அன்று சேலம், கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்கள் பங் கேற்கும் வகையில் குறள் ஒப்பித்தல் = போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள்நடை பெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட் சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி இ.ஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.2024 ஆம் நாளன்றுகன் னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளிவிழா நிகழ்ச்சியில் ஒவ்வோரு ஆண்டும் அனைத்து மாவட்டங்களிலும் குறள்வாரம் கொண்டாடப்படும் என அறி விக்கப்பட்டது.
மேற்கண்ட அறிவிப்பினை - செயல்படுத்தும் வகையில் குறள் வார விழாவின் ஒரு நிகழ்வாக 19.01.2026 அன்று முற்பகல் 10.00 மணிக்கு சேலம், - கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள் ளியில் பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் குறள் ஒப்பித்தல் போட்டி நடத்திட திட்ட மிடப்பட்டுள்ளது. குறள் ஒப்பித்தல் போட்டி பொதுமக்கள் மட்டுமேபங்கேற்க வேண்டும். அவரவர் தெரிந்த குறளை ஒப் பிக்கலாம். குறள் போட்டிக்கான பரிசு ஒப் பிக்கும் குறள்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வழங்கப்படும்.

முதற்பரிசாக முதல் ஐந்து நபர்க ளுக்கு ரூ.5000/ வீதமும், இரண்டாம் பரி சாக ஐந்து நபர்களுக்கு ரூ.3000/வீதமும், மூன்றாம் பரிசாக ஐந்து நபர்களுக்கு ரூ.2000/ வீதம் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். குறள் மற்றும் ஓவியப்போட்டி பொதுமக்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். ஓவியப்போட்டி 19.01.2026 அன்று மதி யம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை சேலம், கோட்டை அரசு மகளிர் மேல்நி லைப் பள்ளியில் நடைபெறும். ஓவியப் போட்டிக்கான தலைப்பு "திருக்குறள் சார்ந்த வகையில் இருக்கும். இதில் சிறந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படும். ஓவி யப் போட்டிக்கு முதற்பரிசு ரூ.5000/, இரண்டாம் பரிசு ரூ.3000/, மூன்றாம் பரிசு ரூ.2000/ என மூன்று நபர்களுக்கு பரிசு மற் றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மேற்காணும் போட்டிகளில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களின் ஆதார் அட்டை உடன் கொண்டு வரவேண்டும்.

எனவே, பொதுமக்கள் இப் போட்டிகளில் கலந்துகொண்டு பயன்பெ றுமாறு கேட்டுக் கொள்ளப் இவ்வாறு மாவட்ட டாக் படுகிறது. ஆட்சித்தலைவர் டர்இரா.பிருந்தாதேவி.இ.ஆ.ப.. அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், சேலம் மாவட்டம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews