தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை 6 வாரங்களுக்குள் கண்டறிய உச்சநீதிமன்றம் உத்தரவு
நவோதயா பள்ளிகளை தொடங்க மத்திய அரசுடன் ஆலோசியுங்கள்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ”ஜவஹர் நவோதயா பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பின்பற்றபடுகிறது. ஆனால் தமிழக அரசு இருமொழி கொள்கையை சட்டமாக்கியுள்ளது” என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், ”ஜவஹர் நவோதயா பள்ளிகள் விவகாரத்தை மொழிப் பிரச்சனையாக மாற்றக் கூடாது. நாம் கூட்டாட்சி அமைப்பில் வாழ்கிறோம். குடியரசின் ஒரு பகுதியாக தமிழகம் உள்ளது. ஓரடி முன்னேறினால், மத்திய அரசும் ஓரடி முன்னால் வரும்.
ஜவஹர் நவோதயா பள்ளிகளை திணிப்பாக பார்க்காமல், மாநில மாணவர்களுக்கான வாய்ப்பாக பார்க்க வேண்டும். மாநில அரசின் மொழிக் கொள்கை இதுதான் என்று மத்திய அரசிடம் கூறுங்கள், அது குறித்து ஆலோசனை நடத்துங்கள்” என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
நவோதயா பள்ளிகள் - உச்சநீதிமன்றம் உத்தரவு Navodaya schools - Supreme Court order
``என் மாநிலம் என்ற மனப்பான்மையை தவிர்த்து மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தை மொழி பிரச்சினையாக்க வேண்டாம். நிலங்களை கையகப்படுத்தி தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகளை உருவாக்க வேண்டும்''
தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Search This Blog
Monday, December 15, 2025
Comments:0
Home
Navodaya schools
Navodhaya
Supreme Court
Supreme Court orders
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை 6 வாரங்களுக்குள் கண்டறிய உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை 6 வாரங்களுக்குள் கண்டறிய உச்சநீதிமன்றம் உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.