பி.இ. விண்ணப்பப் பதிவு தொடக்கம் - எந்தெந்த கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகள்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 08, 2025

Comments:0

பி.இ. விண்ணப்பப் பதிவு தொடக்கம் - எந்தெந்த கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகள்?



பொறியியல் படிப்புகளுக்கு மே 7 முதல் விண்ணப்பம்.

பொறியியல் படிப்புகளுக்கு மே 7 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிப்பு.

நாளை மறுநாள் தொடங்கி ஜூன் 6ஆம் தேதி வரை பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

https://www.tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகிறது.

பொறியியல் படிப்புகளுக்கு மே 7 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பொறியியல் படிப்புகளுக்கு மே 7 முதல் விண்ணப்பம்

பொறியியல் படிப்புகளுக்கு மே 7 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிப்பு

நாளை மறுநாள் தொடங்கி ஜூன் 6ஆம் தேதி வரை பொறியியல் படிப்புகளுக்கு

https://www.tneaonline.org

என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்;


12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகிறது

TNEA 2025 - Engineering Admission - மே 7ம் தேதி இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - https://www.tneaonline.org/

பி.இ. விண்ணப்பப் பதிவு தொடக்கம்

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாக உள்ள நிலையில், மேற்படிப்புகளில் சேர்க்கை பெற பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில், பி.இ., பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., படிப்புகளுக்கான டி.என்.இ.ஏ., எனப்படும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு, மே 7ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

'ஆன்லைன் விண்ணப்பித்திற்கான https://www.tneaonline.org/ எனும் இணையதளம் மே 7ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும்' என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல் லூரிகளில் வழங்கப்படும் பொறி யியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவை உயர்கல் 110 வித் துறை அமைச்சர் கோவி.செ ழியன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியா ளர்களிடம் அவர் கூறியது:

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ. பி.டெக்.உள் ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு மாண வர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தின் மூலம் புதன்கிழமை (மே 7) முதல் ஜூன் 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக் கலாம்.

நிகழாண்டு மாணவர்கள் பயன் பெறும் வகையில், 11 அரசு பொறி யியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு - மெஷின் லேர்னிங், சைபர் செக்யூரிட்டி, டேட்டா சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், மெக்கட்ரானிக்ஸ், ரோபோட் டிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன், எல்க்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட் ரூமெண்டேசன், இண்டஸ்ட் ரியல் அண்ட் பயோ டெக்னா லஜி ஆகிய புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூ லம், அரசு பொறியியல் கல்லூரிக ளில் கூடுதலாக 720 மாணவர்கள் சேர்க்கப்படுவர். அதேவேளையில் 7.5 சதவித அரசு ஒதுக்கீட்டின் கீழ் 54 மாணவர்கள் கூடுதலாக பயன் பெறுவர்.

எந்தெந்த கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகள்? கோவை அரசு பொறியியல் கல்லூரி- பி.இ.கம்ப் யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங் (ஏஐ மற் றும் மெஷின் லேர்னிங்). சேலம் அரசு பொறியி யல் கல்லூரி - ஏஐ மெஷின் லேர்னிங், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி சைபர் செக்யூரிட்டி, போடி நாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரி டேட்டா சயின்ஸ். ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி டேட்ட சயின்ஸ், காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பி.டெக். தகவல் தொழில்நுட்பம். தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி - பி.டெக். தகவல் தொழில் நுட்பம்.

திருச்சி அரசு பொறியியல் கல்லூரி பி.இ. மெக் கட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், வேலூர் தந்தை பெரி யார் அரசு பொறியியல் கல்லூரி - பி.இ. ரோபோட் டிக்ஸ் ஆட்டோமேஷன், தஞ்சாவூர் அரசு பொறியி யல் கல்லூரி - பி.இ. ரோபோட்டிக்ஸ் ஆட்டோமே ஷன், திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி - பி.இ. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென் டேஷன் என்ஜினீயரிங், பி.டெக். இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி.

முக்கிய தேதிகள் விண்ணப்பப் பதிவு தொடங்கிய நாள் - மே 7 விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 6

அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டிய கடைசி நாள் - ஜூன் 9

ரேண்டம் எண் வெளியீடு - ஜூன் 11

சான்றிதழ் சரிபார்ப்பு - ஜூன் 10 முதல் 20 வரை தரவரிசைப் பட்டியல் வெளியீடு -ஜூன் 27 தரவரிசையில் பிழை இருந்தால் சேவை மையத்தை தொடர்பு கொள்ள வேண்டிய நாள்கள் ஜூன் 28 முதல் ஜூலை 2 கலந்தாய்வு தொடங்கும் நாள்- ஏஐசிடிஇ நாள்காட்டியின்படி பின்னர் அறி விக்கப்படும்

முதல் நாளில் 11,462 பேர் பதிவு

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு புதன்கிழமை முதல் தொடங்கிய நிலையில் முதல் நாளில் மாலை 6 மணி வரை 11,462 பேர் பதிவு செய்துள்ளனர். அவற்றில் 2.413 பேர் கட்டணம் செலுத்தியுள்ள னர்.

இந்த 11 பொறியியல் கல்லூரிகளுக்கும் தலா 60 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

2,413 பேர் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய் துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews