கோடை கால பயிற்சி முகாம்: கல்லூரி மாணவர்களுக்கு நூலகத் துறை அழைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 08, 2025

Comments:0

கோடை கால பயிற்சி முகாம்: கல்லூரி மாணவர்களுக்கு நூலகத் துறை அழைப்பு

கோடை கால பயிற்சி முகாம்: கல்லூரி மாணவர்களுக்கு நூலகத் துறை அழைப்பு

சென்னை, மே 7: சென்னை மாவட்ட மைய நூலகத்தில் வெள்ளிக்கி ழமை (மே 9) முதல் 14 நாள்களுக்கு நடைபெறவுள்ள கோடை கால மாணவர்க பயிற்சி முகாமில் பங்கேற்க கல்லூரி மாணவர்களுக்கு பொது நூலகத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகர நூலக ஆணைக்குழுத் தலைவர் மனுஷ்ய புத்திரன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொது நூலகத் துறையின் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் மே 9 முதல் மே 22-ஆம் தேதி வரை சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலக அரங்கில் நடை பெறவுள்ளது. இதில், 14 துறைகள் சார்ந்து 60 தலைப்புகளில் 60 வல்லு நர்களும், ஆளுமைகளும் உரையாற்றவுள்ளனர். ட்ராட்ஸ்கி மருது, இயக்குநர்கள் மிஷ்கின், லிங்குசாமி, முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நக்கீரன் கோபால், மனுஷ்ய புத் திரன், பாரதி கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ள னர்.

இந்தப் பயிலரங்கில் உயர்கல்வி, திரைப்படக் கலை, சமூக ஊடக பயிற்சி, கவிதை, புனைகதை, இதழியல், பேச்சுக்கலை, மின்நூல்கள் என பல்வேறு துறைகளில் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு வழிகாட் டும் வகையில் இந்தப் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்ப திவு செய்த மாணவர்கள் மட்டுமே இந்த பயிலரங்கில் பங்கேற்கலாம்.

தொடர்புக்கு: 78452 21882.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews