ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கு 10,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு
வரும் கல்வியாண்டில் ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கு 10,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள நிலையில், இதற்கான உடனடி மாணவர் சேர்க்கைக்காக சென்னை ரஷிய கலாசார மையத்தில் மே 10, 11 ஆகிய தேதி களில் ரஷிய கல்விக் கண்காட்சி நடைபெ றவுள்ளது.
இது குறித்து சென்னையிலுள்ள தென் னிந்தியாவுக்கான ரஷிய துணைத் தூதர் வாலெரி கோட்ஜெவ், சென்னை ரஷி யக் கலாசார மையத்தின் இயக்குநரும், துணைத் தூதருமான அலெக்ஸாண்டர் டோடோநவ் மற்றும் ஸ்டடி அப்ராட் எஜூகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவ னத்தின் மேலாண் இயக்குநர் சி.ரவிச்சந்தி ரன் ஆகியோர், சென்னை ஆழ்வார்பேட் டையிலுள்ள ரஷிய கலாசார மையத்தில் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதா வது:
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட உயர்
தர மருத்துவக் கல்வியை வழங்குவதில் ரஷி யப் பல்கலைக் கழகங்கள் சிறப்பாக செயல் பட்டு வருகின்றன. இதனால், கடந்த ஆண்டில் ரஷியாவில் மருத்துவம் படிக் கும் மாணவர்களின் எண்ணிக்கை 200 சத வீதமாக அதிகரித்தது. மருத்துவப் பல்க லைக் கழகங்களில் கடந்த ஆண்டு 8,000 ஆக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த மருத் துவ இடங்கள், 2025-2026 கல்வியாண்டில் 10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.
இதில் சேர்ந்து கல்வி பயில தேசிய தகுதி தேர்வான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றி ருப்பதுடன், பிளஸ்-2 வகுப்பில் முக்கியப் பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும், எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற் படுத்தப்பட்ட மாணவர்கள் குறைந்தபட் சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந் தால் போதுமானது. தமிழ் வழியில் படித்த மாணவர்களும் எம்பிபிஎஸ், பி.இ படிப்பு களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த மருத்துவப் படிப்புகளுக்கான
உடனடி மாணவர் சேர்க்கையை நடத் தும் வகையில், மே 10,11 ஆகிய தேதிகளில் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள ரஷிய கலாசார மையத்தில் ரஷிய கல்விக் கண்காட்சி நடைபெறும். இதில் ரஷியா விலுள்ள வோல்கோகிராட் மாநில மருத் துவப் பல்கலைக்கழகம், இம்மானுவேல் காண்ட் பால்டிக் பெடரல் பல்கலைக்கழ கம் உள்ளிட்ட பல முன்னணி பல்கலைக் கழகங்கள் தங்கள் அரங்கை அமைக்கவுள் ளன.
மருத்துவம் மட்டுமன்றி பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் இளநிலை பட்டங்களுக்கும் உடனடி சேர்க்கை கிடைக்கும். இதுபோன்ற கண்காட்சி மே 13-இல் கோவை தி கிராண்ட் ரீஜெண்ட் ஹோட்டலிலும், மே 14-இல் சேலம் ஜிஆர்டி ஸைப் ஹோட்டலிலும், மே 15-இல் திருச்சி பெமினா ஹோட்டலி லும், மே 16-இல் மதுரை ராயல் கோர்ட் ஹோட்டலிலும் நடைபெறவுள்ளது என் றனர்.
Search This Blog
Thursday, May 08, 2025
Comments:0
Home
MBBS
ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கு 10,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு
ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கு 10,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.