ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை, மே 7: ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் காலி
யாக உள்ள 330 இடங்களை நிரப்ப தேர்வு அறிவிக்கை வெளியிடப் பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 20 முதல் கணினி வழியாக நடைபெ றவுள்ள இத்தேர்வுக்கு மே 13-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. அதன்படி, கால்நடை உதவி மருத்துவர், நகர் மற்றும் ஊரமைப்புத் துறை உதவி இயக்குநர், புள்ளியியல் துறை உதவி இயக்குநர் உள்பட 32 பதவிகளுக்கான 330 காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்கலாம். தேர்வாணைய இணையதளத்தில் மே 13 முதல் ஜூன் 11 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வுக்கான கட்டணத்தை 'யுபிஐ' செயலி மூலம் செலுத்தலாம்.
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு இரண்டு நிலை களைக் கொண்டது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகி யவையாகும். எழுத்துத் தேர்வு தமிழ் தகுதித் தேர்வு, பொது அறிவு மற்றும் பட்டப்படிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தாகும். தேர்வர்களின் நலன் கருதி, முதல்முறையாக பாடத் திட்டத் தில் அலகு வாரியாக கேட்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கை தேர்வு அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
Thursday, May 08, 2025
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.